விண்வெளிக்கு பறக்கும் இந்தியர்கள்.. பணிகள் நிறைவு! இஸ்ரோ சிவன் சொன்ன தகவல்.. வியக்கும் உலக நாடுகள்
இஸ்ரோவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ சிவன் முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
கோவை: இஸ்ரோ நிறுவனம் இப்போது விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இஸ்ரோ சிவன் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் இந்தியாவும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இன்று உலக நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்களை இஸ்ரோ மூலமே செலுத்துகிறது.
அந்தளவுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. இத்துடன் நில்லாமல் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் கூட இஸ்ரோ நிறுவம் ஆய்வு செய்தே வருகிறது.

இஸ்ரோ சிவன்
இஸ்ரோ அமைப்பிற்கு கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் சிவன். இவர் இஸ்ரோ தலைவராக இருந்த காலத்தில் தான் இஸ்ரோ அமைப்பு பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. குறிப்பாக இவரது தலைமையில் தான் சந்திரயான் 2 திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கோவை அடுத்துள்ள பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் இஸ்ரோ சிவனுக்கு விருது வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவன் பல முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

விண்வெளி துறை
இந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ முன்ளான் தலைவர் சிவன், "பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் முயற்சியால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.. பிரதமரின் நடவடிக்கைகளால் பல்வேறு துறைகளில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. கல்வி- ஸ்டார்ட்அப்-தொழில் சூழல் அமைப்பை துடிப்பானதாக மாற்ற மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.. இது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும்.. மாணவர்கள் விண்வெளி துறையில் கால் பதிக்க வேண்டும்.

ககன்யான்
இஸ்ரோ இப்போது பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.. மனிதர்களை ஏழு நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி.. அவர்கள் அங்கேயே தங்கி சோதனை செய்து.. பின்னர் பூமிக்கு அழைத்து வரும் திட்டம்தான் ககன்யான்.. அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நாம் சாட்டிலைட்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பி வந்தோம். இப்போது தான் முதல்முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளோம்.

சவால்கள்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் பல கட்டுப்பாடுகள் தேவை. அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவை.. மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பு தனியாக ராக்கெட் தேவை.. அதை உருவாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும், அங்கு விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு பூமியில் இருப்பது போன்ற சீதோஷன நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும். இப்படி பல சவால்கள் உள்ளன.

ரோபோ
குறிப்பாக அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது, உச்சபட்ச வெப்பத்தை தாங்கும் தொழில்நுட்பம் நமக்கு தேவைப்படுகிறது.. மேலும், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தரையிறங்க வேண்டும். இதற்காக பலதரப்பட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனை அனைத்தும் முடிந்தவுடன். மனிதர்கள் இல்லாமல், முதலில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்வார்கள். அதில் இருந்து கிடைக்கும் டேட்டாக்களை ஆராய்ந்து பாதுகாப்பு உறுதி செய்தவுடன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவார்கள்" என்றார்.

சந்திராயன் 2
தொடர்ந்து சந்திராயன் 2 குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சந்திராயனில் இருக்கும் விண்கலம் இன்னுமே நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.. நிலவில் இறங்கிய லேண்டர் விண்கலம் செயல்திறன் இழந்துவிட்ட போதிலும், அது நமக்கு பல தகவல்களை அனுப்பியுள்ளது.. அதில் இருந்து கிடைத்த டேட்டாக்களின் அடிப்படையில் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications