Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நித்யா.. பிரசவத்தின் போது இப்படியாக ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கோவை: கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே பிரசவத்தின்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் நித்யா திடீரென உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கிறது.

பிரவசத்தின் போது தாய் அல்லது சேய் மரணம் என்பது அபூர்வமாகவே நடைபெறும். அதற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. அதேநேரம் சில சமயங்களில் சிகிச்சைக்கு தாமதம் அல்லது சிகிச்சையின்போது செய்யும் சில தவறுகளும் உயிரிழப்பிற்கு காரணமாகவிடுகிறது. அந்த வகையில் கேரளாவின் ஆழப்புழாவில் உள்ள மருத்துவமனையில் இரட்டை குழந்தை பெற்ற பெண், மருத்துவனையின் தவறால் இறந்ததாக புகார் எழுந்துள்ளது.

what happened to Nithya who gave birth to twins in a famous hospital in Tiruvilla

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் கே.ஜே.மோகனன் என்பவர் வசிக்கிறார். இவரது மகள் நித்யாவுக்கு 28 வயது ஆகிறது. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நித்யாவுக்கு கடந்த ஜூன் 7ம் தேதி அன்று காலை 6 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே திருவல்லாவில் உள்ள ஒரு பிரப தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நித்யாவை அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அங்கு காலை 11 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன்பிறகு அவருக்கு திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நித்யாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணிக்கு நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தவறான சிகிச்சையே நித்யாவின் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.

அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதும் நித்யாவின் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள் என்றும் அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம் என்றும் கூறிய நித்யாவின் உறவினர்கள், மாலை 3 மணியளவில் அவருக்கு இதய பிரச்சினை ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எங்களிடம் தெரிவித்தனர். அவரை பார்க்க வேண்டும் என்று கூறியும், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டனர்.

மாலை 6 மணிக்கு நித்யாவின் உடல் நிலை மோசம் அடைந்ததாக கூறினர். அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேட்டபோது, அதற்கும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. அதன்பிறகு திடீரென அவர் உயிரிழந்து விட்டதாக எங்களிடம் கூறினார்கள். தவறான சிகிச்சை அளித்ததால்தான் நித்யா உயிரிழந்து இருக்கிறார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து திருவல்லா போலீசார் மற்றும் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர். பிரசவத்தின்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+