மாமன்னன் உதயநிதி ஸ்டாலின்.. துணை முதல்வர் பதவி.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் சொன்னது என்ன?
கோவை: உழைப்புக்கு எடுத்துக்காட்டு, தமிழ் சமுதாயத்தின் செல்லப்பிள்ளை, கலைஞரின் பேரப்பிள்ளை, மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார். நூற்றாண்டு விழாவையொட்டி கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணா, சி.சுப்பிரமணியம், திருவள்ளுவர், காமராஜர், தஞ்சை பெரிய கோயில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் உள்ளிட்டவை இதற்கு முன்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தில் சில்வர் 50 சதவீதம், காப்பர் 40 சதவீதம், நிக்கல் 5 சதவீதம், சிங்க் 5 சதவீதம் ஆகியவை உள்ளன.
இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் வெளியிட்டார். இதையடுத்து, கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை திமுகவினர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்திந்தார். கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அவரிடம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது: பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் அவர்களின் இந்த மடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும்,செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாகவும் இருந்தது. நான் முதல்வரைச் சந்தித்தபோது கோவைக்குச் செல்கிறேன். பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அளிக்க உள்ளேன் என்று சொன்னேன். முதல்வர் சார்பாகவும் வாழ்த்து சொன்னார். ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாசாரம்.
மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதவை ஆரம்பித்ததில் இருந்து எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அதேபோல, ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதவிற்கு எதிராகவே உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசின் இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையைக் கான வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலைஞர் உரிய நேரத்தில் உள்ளாட்சித் துறையையும், துணை முதல்வர் பதவியையும் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார். குறிப்பாக, உழைப்பு, உழைப்பு என்றால் அது ஸ்டாலின்தான் என்று கலைஞர் சொன்னார்.
அதேபோல, அந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் செல்லப்பிள்ளை, கலைஞரின் பேரப்பிள்ளை, மாமன்னன் உதயநிதிஸ்டாலினும் இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வலுப்படுத்தி வருகிறார். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரைப் போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார் என்று கூறினார்.
-
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications