கோவை மசாஜ் சென்டரில் மளிகை கடைக்காரர் கண்ட காட்சி.. வேலூர் லாட்ஜில் அழகிகள்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் மசாஜ் சென்டரில அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டவரை மளிகை கடைக்காரர் ஒருவர் சிக்க வைத்துள்ளார். இதேபோல் வேலூரிலும் லாட்ஜில் 3 அழகிகள் சிக்கி உள்ளனர்.

வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையிலான போலீசார் அங்கு சென்று தங்கும் விடுதியில் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் ஒரு அறையில் 3 இளம்பெண்கள் இருந்தார்கள்.

What was the scene seen by the police at the Coimbatore massage center

விசாரணையில் அவர்கள் 3 பேரையும் விபச்சாரத்தில் ஈடுபட அழைத்து வந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு அங்குள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சின்னசேக்கனூரை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் குள்ளமணி (வயது 65), திருப்பத்தூர் மாவட்டம் சிங்காரப்பேட்டையை சேர்ந்த தங்கும் விடுதி உதவி மேலாளரான சத்யா (31) ஆகியோரை கைது செய்தார்கள்.. இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூரில் இப்படி என்றால் கோவையில் மசாஜ் சென்டர் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் அதிரடியாக மீட்டனர். இந்த விவகாரத்தில் புரோக்கர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.. கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயதாகும் சூரிய பிரகாஷ் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க சுக்கிரவார்பேட்டை ஆர்.ஜி. வீதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர், தங்களின் மசாஜ் சென்டரில் அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அழைத்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்ய பிரகாஷ், ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மசாஜ் சென்டரில் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் செய்வது உறுதியானது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஜெயதீஷ்வரனை கைது செய்தார்கள். மேலும் விபசாரத்தில ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு அரசின் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+