Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்ப்பாட்டம் இல்லாத மனிதர்.. பழைய பெரிய கை.. கோவையில் அண்ணாமலையை வீழ்த்திய திமுக கணபதி யார்?

Subscribe to Oneindia Tamil

கோவை; கோவை லோக்சபா தொகுதி எம்பியாக கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். இங்கே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பலரின் பெயர்கள் சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு தற்போது வெற்றியும் உள்ளார்.

கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக அறிவித்த போதே பலரும் அதை விமர்சனம் செய்தனர். அவர் அத்தனை பிரபலம் இல்லை. அண்ணாமலை, அதிமுக சிங்கை அளவிற்கு பிரபலமான முகம் கிடையாது.

Lok Sabha Election 2024 2024 coimbatore

முக்கியமாக டாக்டர் மகேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்தது. அவர்களில் ஒருவரை திமுக தேர்வு செய்து இருக்கலாம். ஆனால் கடைசியில் கணபதி ராஜ்குமார் தேர்வாகி விட்டார். இதனால் அண்ணாமலை அல்லது சிங்கைதான் வெற்றிபெறுவார்கள் என்று சில அரசியல் நிபுணர்கள் கணித்து இருந்தனர்.

ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தவிடு பொடியாக்கி கோவை லோக்சபா தொகுதி எம்பியாக கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி; கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி முகம் கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.

யார் இவர்?" கோவை முன்னாள் அதிமுக மேயர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கணபதி ராஜ்குமார் ஆவார். 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரின் 5வது மேயராக 2011 - 16 வரை அதிமுகவில் இருந்து சேர்ந்த கணபதி பி.ராஜ்குமார் பதவி வகித்து வந்தார். அங்கே அதிமுகவின் டாப் தலைகளில் ஒருவராக இருந்தார்.

அதன்பின் 2020ல் கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இடையே திமுகவிற்கு வந்தார். அங்கே திமுக வளர செந்தில் பாலாஜி எப்படி காரணமாக இருந்தாரோ அதேபோல் இவரும் முக்கியமான மாஸ்டர் மைண்டாக இருந்தார். இந்த நிலையில் அவரை திமுக வேட்பாளராக தேர்வு செய்தது.

பொதுவாக தேர்தலில் ஜெயிக்க மீடியா பலத்தை விட.. நேரடியாக களத்தில் பணிகளை செய்வது முக்கியம். அப்படித்தான் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அங்கே உள்ள அமைப்புகள், பிரிவுகள், தொழிற்சங்கங்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை செய்து வாக்கு சேகரித்து வந்தார் . பெரிதாக செய்திகளில் தோன்றாமல் நேரடியாக களப்பணிகளை செய்து வந்தார். அங்கே வாக்குகளை பெரிய அளவில் தீர்மானிக்கும் சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து கணபதி ராஜ்குமாரும் வாக்குகளை கேட்டார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத மனிதர். நல்ல ஆங்கில புலமை தெரிந்ததால் அங்கே இருக்கும் பிஸ்னஸ் மேன்களிடமும் தீவிரமாக பேசினார். செந்தில் பாலாஜி இல்லாத நிலையில் அங்கே இவரின் செயல்பாடுகள் திமுக நிர்வாகிகள் இடையே இது ஒரு வித ஒற்றுமையை புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக இவர் ஸ்மார்ட்டாக செயல்பட்டு அதிமுக - பாஜக மோதலால் பிரியும் வாக்குகளை குறி வைத்தார்.

முக்கியமாக அங்கே ஒரு ஜாதியின் வாக்குகள் அதிமுக - பாஜக இடையே பிரியும். இந்த நிலையில் தலித் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கேரளாவில் இருந்து வந்தவர்களின் வாக்குகள், அந்த குறிப்பிட்ட ஜாதிக்கு வெளியே இருக்கும் வாக்குகள் மூலம் வெல்ல முடியும் என்பதை குறி வைத்து அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+