விபச்சாரத்தில் அந்த பிரபலம்? கோவை ஸ்டார் ஓட்டலில்? கோயம்புத்தூர் சிக்கந்தர் பாஷா சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் விபச்சார தொழிலை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்த நபர் தற்போது கைதாகி உள்ளார்.. இவர் எப்படி பிடிபட்டார்? இந்த நபரின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

கோவையிலுள்ள ஸ்டார் ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாக போலீசுக்கு நிறைய புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. எனவே, கோவை தனிப்படை போலீசார் இது தொடர்பான நடவடிக்கையில் இறங்கினார்கள்.

kovai prostitution coimbatore

சிக்கந்தர் பாஷா: அப்போதுதான் 41 வயதுடைய சிக்கந்தர் பாஷா என்பவரின் பெயர் அடிபட்டது.. இதையடுத்து, போலீசார் பதுங்கியிருந்த சிக்கந்தர் பாஷா, ஏஜென்ட் ஸ்டீபன் ராஜ் என்பவரையும் கைது செய்தனர். ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற வாட்ஸ்அப் குரூப்பை வைத்து, இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து, ஏஜென்ட்கள் மூலம் பெண்களை அழைத்து வந்து கோவையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. கோவையிலுள்ள ஸ்டார் ஹோட்டல்களில், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 10 சிம்கார்டு, 16 செல்போன், 7 பேங்க் பாஸ்புக் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி கைது: தற்போது கைதாகியிருக்கும் சிக்கந்தர் பாஷா என்பவர் யார் ? இவருடைய பின்னணி என்ன என்பது குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.. இந்த சிக்கந்தர் பாஷா, 4 வருடங்களுக்கு மேலாக போலீசாருக்கு டிமிக்கி தந்து கொண்டிருந்தவர்..

கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில், ரூ.4,500 அபகரித்துவிட்டதாக, போத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.. ஸ்டீபனிடம் அப்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டபோதுதான், சிக்கந்தர் பாஷா பற்றின தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தேனியை சேர்ந்த சிக்கந்தர் பாஷாவிடம் தான், ஸ்டீபன் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்..

சுற்றுலா பயணிகள்: இவர்கள் 2 பேருமே ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளிலிருந்து பெண்களை அழைத்து வந்துள்ளனர்.. சுற்றுலா பயணிகள் போல, அந்த பெண்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த விபச்சார தொழிலில், ஒவ்வொரு மாதமும் பல லட்சங்களை அள்ளியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, கைகளில் ஏகப்பட்ட பணம் புரண்டதால், தமிழகத்திலிருக்கும் ஏராளமான ரவுடிகளுக்கு நிதி அளித்து வந்தாராம்.. இவ்வளவு விவரங்களையும் சேகரித்தபோதுதான், கொல்கத்தாவில் சிக்கந்தர் பாஷா பதுங்கியிருக்கும் தகவலும் கிடைத்துள்ளது.. ஆனால், கொல்கத்தாவுக்கு போலீசார் விரைந்து செல்வதற்குள், திடீரென துபாய்க்கு தப்பி ஓடிவிட்டாராம் சிக்கந்தர் பாஷா.. இத்தனை மாத காலமும் விடாமல் போலீசார் கண்காணித்து வந்ததுடன், அனைத்து விமான நிலையங்களுக்கும் அலர்ட்டையும் தந்து வைத்திருந்தனர்.

செல்போன் விவரம்: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, சிக்கந்தர் பாஷா, துபாயிலிருந்து சென்னைக்கு வந்ததை அறிந்த போலீசார், மதுரையில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.. பாஷா மீது 40 கேஸ்களும், ஸ்டீபன் மீது 20 கேஸ்களும் ஏற்கனவே உள்ளதாம். எனவே, இவர்களுக்கு பின்னால் செயல்படுவது யார் யார்? என்ற ஆய்வையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். சிக்கந்தர் பாஷாவின் செல்போனிலுள்ள விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.

விபச்சார தொழிலுக்காகவே துவங்கப்பட்ட அந்த வாட்ஸ்அப் குரூப்பில் மொத்தம் 171 நபர்கள் இருக்கிறார்களாம்.. பாஷாவிடம் இருந்த 13 செல்போன்களிலும் ஆய்வு நடக்கிறது. கோவையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல்களில், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுடன் நீண்ட நாட்களாக சிலர் தங்கியிருந்ததாகவும் சொல்கிறார்கள்? இவர்கள் யாரென்ற தகவலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பிரியாணி: சிக்கந்தர் பாஷா, ஒருபக்கம் ரவுடிகளுக்கு நிதி அளித்து வந்தாலும், மறுபக்கம், கையில் புழங்கிய பணத்தில், பெங்களூரில் பிரியாணி ஹோட்டலும் நடத்தி வந்துள்ளதால், அந்த ஹோட்டல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக இருவர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும் சொல்கிறார்கள்.

இந்த குற்ற சம்பவத்தின் பின்னணியில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், போலீசார் இதனை மும்முரமாக விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல், சிக்கந்தர் பாஷா இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம்.. இதற்காக 8 மேனேஜர்களை நியமித்துள்ளார்.. அதேபோல, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய உள்ளிட்ட நாடுகனிளல் 117 ஏஜென்ட்கள் இருக்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் டெல்லியைச் சேர்ந்த கபீர் சிங் என்பவர்தான் மையப்புள்ளி.. இவரை வைத்துதான் இந்த நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது. இதில், மாத மாதம் ரூ.50 லட்சம் சம்பாதித்துள்ளார்களாம்.

சிக்கந்தர் மீது கோவை மாநகரில் துடியலூர், சரவணம்பட்டி, பீளமேடு, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, காட்டூர், சாய்பாபா காலனி ஆகிய காவல் நிலையங்களிலும், கோவை மாவட்டத்தில் பேரூர், சூலூர் காவல் நிலையங்களிலும் மற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பிற மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனிப்படை: கடந்த 4 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த சிக்கந்தர் பாதுஷா, ஸ்டீபன் ராஜ் இருவரும் தேனி மாவட்டம் கம்பத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலமாக பாலியல் தொழிலை, வெளிநாட்டு பெண்களை வைத்து செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இவரை பிடித்தால்தான், பல்வேறு உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள்.. அதேபோல, இந்தியா முழுவதும் ஏஜென்டுகளாக செயல்பட்டு வரும் 117 நபர்களையும் பிடிக்க தனிப்படைகள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+