அடச்சீ.. "ஆன் தி வே"யில் பலாத்காரம்.. பப்பாளி சாப்பிட சொன்னாரு.. அபார்ஷன் வேற.. போலீசுக்கு ஓடிய பெண்
கோயம்புத்தூர்: கோவை மாவட்ட மகளிர் போலீசில் இளம்பெண் அளித்துள்ள புகார் ஒன்று பரபரப்பை கிளப்பி வருகிறது.. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையையும் துரிதமாக துவங்கி உள்ளனர்.
கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 27 வயதாகிறது.. இவர் மாவட்ட மகளிர் போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளதாவது:
''நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.. எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளைஞரையும் பேசி முடித்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு கடந்த நவம்பர் 13ம் தேதி, பெற்றோர்கள் நிச்சயம் செய்தனர்.. இதற்கு பிறகு நாங்கள் 2 பேருமே செல்போன் மூலமாக பேசி பழகி வந்தோம்... பிறகு நானும், அவரும் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி ஆனைக்கட்டிக்கு சென்றோம். வருங்கால கணவர் என்ற நம்பிக்கையில் அவருடன் இயல்பாக பழகினேன்.. அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கினோம்..
அங்கு அவர் மது அருந்தினார்.. என்னையும் மது குடிக்க கட்டாயப்படுத்தினார். நான் வேண்டாம் என்றேன். தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தியதால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது.. பிறகு அங்கிருந்து காரில் கிளம்பினோம்.. வரும் வழியில் திடீரென காரை நிறுத்தினார்... என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்... இதன் விளைவாக நான் கர்ப்பமானேன்.

உடனே இதுகுறித்து நான் செல்போன் மூலமாக அவரிடம் சொன்னேன்.. உடனடியாக என்னை திருமணம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் இப்போது என்னால் உன்னை திருமணம் செய்ய முடியாது. அதனால், நீ பப்பாளி, அன்னாசி பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்து விடு என்றார்.. இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு அவர் சொன்னபடி கருவை கலைத்தேன்.
அதன்பிறகு அவர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என்று சொல்லிவிட்டார்.. இதற்கெல்லாம் அவருடைய அப்பா, அம்மா உடந்தையாக இருந்தனர்.. அதனால், என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு, இப்போது திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அப்பெண் புகாரில் கூறியிருக்கிறார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் இளைஞர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மகளிர் போலீசார் கையிலெடுத்து வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications