சாதாரணமா நினைக்காதீங்க! கோவையில் உச்சம் எடுத்த அதிமுகவின் ஈகோ.. அண்ணாமலைக்கு பெரிய சிக்கல்.. அடடா!
கோவை; கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும், அவர் தேர்வு செய்யப்பட்ட விதமும் பாஜகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.

தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
அண்ணாமலை கோவை: இதில் கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். முக்கியமாக டாக்டர் மகேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்தது. கடைசியில் கணபதி ராஜ்குமார் தேர்வாகி உள்ளார்.
அதிமுக வேட்பாளர்; அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.
இவர் 18 வயதில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாராம். அவர் பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டு PGDM இல் சேர ஐஐஎம் அகமதாபாத்தில் சேர்வதற்கு முன்பு அவர் ஃபோகஸ் அகாடமி ஃபார் கேரியர் மேம்பாட்டிற்காக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
அதிமுக விட்டுக்கொடுக்கவில்லை; அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அதிமுக சில தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக திமுகவினர் விமர்சனம் வைத்துள்ளனர்.
அதாவது பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் விதமாக அதிமுக சில தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக திமுகவினர் புகார் வைக்கின்றனர். இப்படி இருக்க கோவையில் மிக கடினமான வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதிலும் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் அதிமுகவின் அடையாளமாக உள்ள எஸ் பி வேலுமணிக்கு நெருக்கம். சிங்கை ராமச்சந்திரனை எஸ் பி வேலுமணியின் குட் புக்கில் இருப்பவர். இவரின் தேர்வே எஸ் பி வேலுமணியின் முடிவாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
அப்படி இருக்க அவர் கண்டிப்பாக இவருக்காக தீவிரமாக களப்பணிகளை செய்வார். சிங்கை ராமச்சந்திரனை வெற்றிபெற வைக்க எஸ் பி வேலுமணி கண்டிப்பாக கடினமான பணிகளை செய்வார். ஒரு பக்கம் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் இந்த தேர்தலை திமுக சவாலாக எடுத்துக்கொண்டு பணிகளை செய்யும்.
இன்னொரு பக்கம் அதிமுக கடினமான வேட்பாளரை நிறுத்தி நாங்கள் டப் கொடுப்போம் என்று சிங்கை ராமச்சந்திரனை களமிறக்கி உள்ளனர். இதனால் அங்கே வேட்பாளராக இருக்கும் அண்ணாமலைக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications