அண்ணாமலையின் காதில் விழுந்த அந்த சத்தம்.. பேசிட்டேயிருந்தவர் பொசுக்னு அழுதுட்டாராமே.. உருகிய கோவை
கோவை: பிரச்சாரத்தின் கடைசிநாளான இன்று, கோவையில் விறுவிறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை.
கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.. இதையடுத்து, தேசிய அளவில் கோவை தொகுதியின் மீது கவனம் குவிந்து வருகிறது. மிகமிக முக்கிய தொகுதி என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் கோவையில் குவிந்து வருகிறது.

அவசியங்கள்: மாநில தலைவர் என்பதாலும், சொந்த தொகுதி என்பதாலும், கோவையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் அண்ணாமலை உள்ளார்...
தமிழகத்திலேயே செல்வாக்கு அதிகமுள்ள தொகுதி என்பாலும், இந்த தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய அவசியமும் தமிழக பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தனை எதிர்பார்ப்புகள் உள்ளதால், கோவை தொகுதி தினந்தோறும் பரபரப்புடன் காணப்படுகிறது.
ஆதரவு: இதுவரை வெளியாகியிருக்கும் கருத்து கணிப்புகளின்படி, பாஜகவுக்கு பெருத்த ஆதரவு என்பது எங்குமே கிடைக்கவில்லை.. நேற்றைய தினம், தந்திடிவியின் கருத்து கணிப்பு வெளியாகியிருந்தது.
அதிலும்கூட, கோவை தொகுதியில் திமுகவின் கையே ஓங்கியிருக்கிறது.. அதாவது, திமுக வேட்பாளர் கணபதி பி ராஜ்குமார் 31 முதல் 37 சதவீதம் வரையிலான ஓட்டுகளை பெறக்கூடும் என்றும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 28 முதல் 34 சதவீத ஓட்டுகளை பெற்று 2வது இடத்தை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அப்படியானால் 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வருகிறார்.. 26 முதல் 32 சதவீத ஓட்டுகளை அண்ணாமலை பெறக்கூடும் என்கிறது தந்தியின் கணிப்பு.
அதிர்ச்சி: பாஜகவினருக்கு இதெல்லாம் அதிர்ச்சியாக இருந்தாலும்கூட, கோவையில் அண்ணாமலையின் ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளதாகவே சொல்கிறார்கள்.. அப்படிப்பார்த்தால் இதுவே பாஜகவுக்கு வெற்றிதான் என்றும் சொல்கிறார்கள் தாமரை கட்சியினர்.. எனினும், இவையெல்லாம் வெறும் கருத்துக்கணிப்புகளே தவிர முடிவுகள் இல்லை. அந்தவகையில், ரிசல்ட் வரும்போதுதான் கோவையின் நிஜ நிலவரம் தெரியவரும்.
அண்ணாமலையின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கருதப்படுவதற்கு அவர் மேற்கொண்ட பிரச்சாரங்களும், முக்கிய காரணம் என்கிறார்கள்.. பட்டியலின பெண் வசந்தி வீட்டில் சாப்பிட்டது முதல் சூலூர் நடுரோட்டில் மறியல் செய்தது வரை பிரச்சாரங்களில் அண்ணாமலையின் அதிரடிகள் பெரும் தாக்கத்தை கோவையில் ஏற்படுத்தக்கூடும் என்றே நம்பப்படுகிறது.
ஆறுதல்: இதோ, இன்றுகூட, கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் முதியோர் இல்லத்திற்கு சென்று ஓட்டு சேகரித்துள்ளார் அண்ணாமலை.. அப்போது பெற்றோரின் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து அவர்களிடம் பேச்சை ஆரம்பித்தார்.. பேசிக்கொண்டேயிருந்தவர் திடீரென கண் கலங்கிவிட்டார்.. உடனே மேடையில் இருந்தவர்கள் எல்லாரும் அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.
பிறகு அண்ணாமலை தொடர்ந்து பேசியபோது, "கடந்த ஒரு வருஷமாகவே முதியோர் இல்லம் வரவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். சாயங்கால நேரத்தில் இங்கு வந்து, எல்லாருடனும் ஒன்றாக உட்கார்ந்து பேச வேண்டும் என்றெல்லாம் நினைத்து கடும் முயற்சி எடுத்தேன். ஆனால் நேரம் கிடைக்கல..
உருக்கம்: எப்படியாவது இங்கே வந்தே ஆக வேண்டும் என்று நேற்றுதான் மிகவும் உறுதியாக இருந்தேன்.. இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் உங்களையெல்லாம் சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்... உங்களை இன்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது" என்று உருக்கமாக பேசினார் அண்ணாமலை..
இதில் ஹைலைட் என்னவென்றால், முதியோர் இல்லத்திற்குள் அண்ணாமலை நுழையும்போதே, "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டு அண்ணாமலையை அவர்கள் அனைவரும் வரவேற்றார்களாம்....!!!












Click it and Unblock the Notifications