15 பிஞ்சுகள்.. 63 வயது தாத்தாவுக்கு தேவையா இதெல்லாம்.. அதுவும் மளிகை கடைக்குள்ளேயே.. தூக்கிய போலீஸ்
மளிகைக் கடைக்காரர் மீது 15 மாணவிகள் புகார் தந்துள்ளதையடுத்து கைதாகி உள்ளார்
கோவை: பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளிக்கு அருகிலேயே ஒரு மளிகை கடை இருக்கிறது.. அந்த மளிகை கடையில் தின்பண்டங்களையும் வந்து வந்துள்ளனர்..

ஸ்நாக்ஸ்
அதனால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும், உணவு இடைவேளை நேரங்களிலும் இந்த கடைக்கு வந்து ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிடுவார்கள்.. இந்த மளிகை கடையின் ஓனர் பெயர் நடராஜன்.. இவருக்கு 62 வயதாகிறது.. 6ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிக்கும் மாணவிகள், இந்த கடைக்கு சென்று உணவு பொருட்கள் வாங்குகின்றபோது, நடராஜன் தன் வேலையை காட்டுவாராம்.. முதலில் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசுவாராம்.. பிறகு, தொட்டு தொட்டு பேசி பாலியல் செயலில் ஈடுபடுவாராம்.

ஸ்கூல் ஹெச்.எம்.
இந்த பள்ளியில் வேறு சில மாநிலத்தை சேர்ந்த மாணவிகளும் படித்து வந்துள்ளனர்.. இவர்களுக்கு மொழி தெரியாததால், நடராஜனுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.. இந்த டார்ச்சர் குறித்து எந்த மாணவியும் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.. ஆனால், விஷயம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு தெரியவந்துள்ளது.. இதைக்கேட்டு அதிர்ந்து போன ஸ்கூல் ஹெச்.எம், உடனடியாக அந்த பள்ளி மாணவிகள் அத்தனை பேருக்கும் பாலியல் விழிப்புணர்வு பற்றி விளக்கமாக சொல்லி இருக்கிறார்...

அசிங்கம்
தலைமை ஆசிரியை பேச பேச, மாணவிகள் ஒவ்வொருவராக தங்கள் பிரச்சனையை சொல்ல முன்வந்தனர்.. முதலில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி முன்வந்துள்ளார்.. மளிகை கடைக்காரரின் அசிங்கத்தை சொல்லி அழுதுள்ளார்.. இவர் இப்படி சொன்னதுமே, அடுத்தடுத்த மாணவிகளும் அதே மளிகைக்கடைக்காரர் மீது புகார்களை சொன்னார்கள்.. மொத்தம் 14 மாணவிகளும் மளிகை கடைக்காரர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்தனர்.

மளிகை கடைக்காரர்
அந்த மளிகைக்கடைக்காரர் மீது ஏற்கனவே இதுபோன்று பல புகார்கள் இருக்கிறதாம்.. இந்த 4 வருடங்களில் 9 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது... இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை, உடனடியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. போலீசாரும் அந்த புகாரின் பேரில் நடராஜனை பிடித்து விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், பள்ளி மாணவிகள் மட்டுமல்லாமல் அந்த பகுதியை சேர்ந்த பல சிறுமிகளுக்கு நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்திருக்கிறது... இப்போது நடராஜன் கைதாகி ஜெயிலில் உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications