வேலுமணியின் சொந்த வார்டில் உதித்த "சூரியன்".. வெற்றிச்செல்வனுக்கு திமுக தலைமை கொடுத்த சர்பிரைஸ்!
கோவை: கோவை துணை மேயராக வெற்றிச் செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு துணை மேயர் பதவி கிடைக்க முக்கிய காரணம் என்ன?
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி வெளியானது. இதில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளின் மேயர் பதவி திமுகவுக்கும் ஒரே ஒரு மாநகராட்சி காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.

துணை மேயர்
முன்னதாக நேற்றைய தினம் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று முன் தினம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் கோவை மேயர் பதவியும் துணை மேயர் பதவியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவை மேயராக எளிமையான இ சேவை மையம் நடத்தி வந்தவர் கல்பனா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டார்.

கோவை டூ சென்னை
இவர் கவுன்சிலராக வென்றதும் கோவையிலிருந்து பேருந்தில் சென்னை சென்று முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அது போல் கோவை திமுகவில் நிறைய கோஷ்டி பூசல்கள் இருந்து வரும் நிலையில் எந்த கோஷ்டியிலும் சேராதவர் கல்பனா. இவரது பெயரை செந்தில் பாலாஜி பரிந்துரைத்தார்.

கோவையில் திமுக கொடி
அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவையில் திமுக கொடியை நாட்ட வைத்ததை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நம்பிக்கை வைத்து முதல்வர் ஸ்டாலின், கல்பனாவை மேயர் வேட்பாளராக அறிவித்தார். அது போல் துணை மேயராக வெற்றிச் செல்வன் அறிவித்தார். அவருக்கு ஏன் வழங்கப்பட்டது.

எஸ் பி வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சொந்த வார்டான 92 -வது வட்டத்தில் வெற்றி பெற்றவர். எஸ் பி வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் உள்ள அனைத்து வார்டுகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதன் மூலம் கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவையை நழுவவிட்டதன் வருத்தம் திமுகவுக்கு இந்த நகர்ப்புற தேர்தலின் மூலம் தீர்ந்து விட்டது என சொல்லும் அளவுக்கு கோவை வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கோவை மேயரும், கோவை துணை மேயரும் நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications