துணைவேந்தர் இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிர்வாகம்! கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த சோதனை!
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி உட்பட பல வருடங்களாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.
குறிப்பாக இக்கோரிக்கையை சுட்டிகாட்டி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிலையை புட்டு புட்டு வைத்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சியாளர் பதவிகள், நிர்வாகத்தில் உள்ளவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பல காலியாக உள்ளது. இவற்றில் முக்கியமாக துணைவேந்தர் பதவி 18.10.2022 முதலும், பதிவாளர் பதவி 02.04.2016 முதலும், தேர்வாணையர் பதவி 15.04.2018 முதலும், கூடுதல் தேர்வாணையர் பதவி 20.08.2009 முதலும், இயக்குனர் SDE பதவி 21.08.2015 முதலும் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பதவி 08.06.2013 முதலும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனால் தற்பொழுது பணியில் இருக்கும் வேறு அதிகாரிகள் கூடுதல் பணியாக மேற்படி பதவிகளை வகித்து வருகின்றனர். இதனால் நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் காலம் தாழ்த்தியும் ஒரு சில முடிவுகள் உடனடியாக எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக எந்தவிதமான வழக்குகளும் நிலுவையில் இல்லாத நிலை இருந்தும் மேற்படி முக்கிய பதவிகளை இன்னும் காலியாக வைத்துள்ளது
கவலையளிக்கிறது. துணை வேந்தர் காலி பணியிடத்திற்கு "மாண்பமை துணைவேந்தர் பொறுப்புக் குழு" என்ற முறையில் சுமார் ஒரு வருட காலமாக நடத்தி வருவதால் முடிவெடுப்பதில் காலதாமதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல 01.09.2023 தேதி படி ஆசிரியர் சார்ந்த பணியிடத்தில் சுமார் 63 காலி பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் சுமார் 281 காலி பணியிடங்களும் உரிய காலத்தில் நிரப்பப்படாமல் உள்ளது.
இவ்வாறு மிக அதிகமான அளவில் காலி பணியிடங்கள் இருக்கும் காரணத்தால் தற்போது பணியில் உள்ள அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் பணி சுமைக்கு ஆளாகின்றனர். மேலும் சரியான நேரத்தில் பணிகளை செய்து முடிப்பதிலும் சுணக்கம் ஏற்படும். அவ்வாறு கூடுதல் பணி செய்யும் அலுவலர்கள் மன அழுத்தத்திற்கும், மனசோர்வுக்கும் ஆளாவார்கள். இதனால் செய்யும் பணிகளில் தவறுகள் நடக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
எனவே மேலே உள்ள அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆட்சியர், நிர்வாகம், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை விரைந்து போர்க்கால அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி நியமனம் செய்து இப்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications