நோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு!
ஆட்டோவுக்குள் உட்கார்ந்து ஒரு பெண் தண்ணி அடிக்கும் வீடியோ வைரலாகிறது
Recommended Video
பொள்ளாச்சி: வெட்கம், மானம், கூச்சம், பயம் எதுவுமே இல்லாமல் ஆட்டோவுக்குள் சரக்கு அடித்து கொண்டிருக்கிறார் இளம்பெண்!
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஒரு பிரியாணி கடை உள்ளது. போன ஞாயிற்றுக்கிழமை இந்த கடைக்கு பக்கத்தில், ஒரு ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.
அந்த ஆட்டோ பின்சீட்டில் ஒரு இளம் உட்கார்ந்திருந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார். மஞ்சள் சுடிதார் அணிந்திருக்கிறார்.

சிகரெட்
அந்த பெண்ணுக்கு எப்படியும் 30 வயது இருக்கும். ஆட்டோ டிரைவர் சிகரெட் பிடித்து கொண்டு அந்த பெண்ணிடம் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். யாரும் அவரை அடிக்கவில்லை, திட்டவில்லை, கட்டாயப்படுத்தவில்லை.. இவராகவே சரக்கு எடுத்து ஜாலியாக குடித்து கொண்டிருந்தார்.

அசால்ட்
மொத்தத்தையும் குடித்துவிட்டு பாட்டிலை அசால்ட்டாக ரோட்டோரம் வீசினார். இதனை அந்த வழியாக சென்ற பலர் பார்த்து ஆடிப்போய்விட்டார்கள். ஒருசிலர் அங்கேயே நின்று அப்பட்டமாக இதை செல்போன்களில் படம் பிடித்தும் கொண்டனர். ஆனால் அந்த பெண் எதையும், யாரையும் பற்றியும் கவலைப்படவே இல்லை.

வைரல் வீடியோ
இந்த பெண் யார் என்றும் தெரியவில்லை. இந்த வீடியோ கடந்த 2 நாட்களாகவே வைரலாகி வயிற்றெரிச்சலையும், ஆத்திரத்தையும் பொதுமக்களுக்கு கிளப்பி வருகிறது. இதனால் போலீசாரும் அந்த பெண் யார் என்ற விசாரணையில் இறங்கினர். அந்த அந்த ஆட்டோ ஓனர் உரிமையாளர் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பது மட்டும் என்பது தெரியவந்தது. இவருக்கு வயது 48 ஆகிறது.

ஐதராபாத்
தண்ணி அடித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்தவராம். பெயர் கவுதமியாம். கல்யாணம் ஆகிவிட்டது. இவர் கணவர் பொள்ளாச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஐதராபாத்தில் புருஷனை பார்த்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக இந்த ஆட்டோவில் ஏறியுள்ளார்.

டாஸ்மாக்
அந்த ஆட்டோ அங்கிருந்த மார்க்கெட் வழியாக சென்றிருக்கிறது. அப்போது வழியில் ஒரு டாஸ்மாக் கடை பெண்ணின் கண்ணில் பட்டுவிட்டது. டாஸ்மாக்கை பார்த்ததும் இந்த பெண் ஆஃப் ஆகிவிட்டார்.. ஆட்டோவை நிறுத்தி இவரே இறங்கி போய் ஆஃப் வாங்கி வந்து, ஆட்டோவில் உட்கார்ந்து குடித்துள்ளார் என்பது தெரியவந்தது.

டிரைவர் கைது
இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து தண்ணி அடித்தால் விடுமா நம் போலீஸ்? பொது இடத்தில் மது அருந்த அனுமதித்தது, பெண் மதுகுடித்தபோது ஆட்டோ டிரைவர் வெளியில் நின்று கொண்டு பொது இடத்தில் சிகரெட் குடித்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மஞ்சள் சுடிதார் கவுதமியை காணோம்.. தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications