இந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி!
காதல் பிரச்சனையில் இளம்பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
கோவை: "ப்ரீத்தி.. இந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே? நான் சொன்ன இடத்தில் ஏன் ரூம் போடல?" என்று காதலன் சந்தேகத்துடன் கேட்டதால், ப்ரீத்தி மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டு இறந்துவிட்டார்.
மன்னார்குடி அடுத்த நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கு அப்பா இல்லை, 4 வருடம் முன்பு இறந்துவிட்டார். அம்மாதான் வளர்த்து வந்துள்ளார்.
கோவை தனியார் என்ஜினியரிங் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி பிரீத்தி படித்து வந்துள்ளார். சில மாசத்துக்கு முன்பு, மத்திய அரசின் தபால் ஊழியர்களுக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றதால், தபால் ஊழியராக தாமரைக்குளம் அடுத்த எடகீழையூரில் வேலையில் போன மாசம் பிரீத்தி சேர்ந்துவிட்டார்.

மண்ணெண்ணெய்
புதிய வேலை என்பதால், கடந்த 20 நாட்களாக தன்னுடைய தாத்தா வீட்டில் தங்கிதான் வேலைக்கு போய் வந்துள்ளார். 4 நாளைக்கு முன்பு நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கோவை சென்ற பிரீத்தி, திங்கட்கிழமை ராத்திரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.

விசாரணை
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்றும் பிரீத்தியின் உடல் கருகிவிட்டது. இதையடுத்து, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், பிரீத்தி காலேஜில் ஒருவரை காதலித்துள்ளார், ஆனால் வேலை கிடைத்ததும் அவருடன் முன்புபோல பேச நேரம் இருப்பது இல்லை போலும்.

லாட்ஜ்
அதனால் காதலனை பார்க்க கோவை வருவதாக சொல்லவும், ஒரு ஓட்டலை சொல்லி அங்கே ரூம் போட சொல்லி உள்ளார். ஆனால், பிரீத்தி வேறு ஒரு லாட்ஜில் ரூம் போட்டதாக கூறப்படுகிறது. இதுதான் காதலனுக்கு பிரச்சனையாகி விட்டது.

துரோகம்
சொன்ன இடத்தில் ரூம் போடாமல், தனியாக ஓட்டலில் ரூம் போட்டு தங்கியதால், காதலனுக்கு சந்தேகம் அதிகமாகி உள்ளது. இதனால் தகராறும் வெடித்துள்ளது. "இங்க ஏன் ரூம் போட்டே.. நான் சொன்ன இடத்தில் ரூம் போடலயே ஏன்? நீ என்னை ஏமாத்திட்டே... துரோகம் பண்ணிட்டே" என்று சரமாரியாக திட்டவும், பிரீத்தி அதிர்ச்சியாகி உள்ளார்.

விரக்தி
ஏற்கனவே வீட்டில் பூர்வீக சொத்தை விற்பதால் வேதனையில் இருந்துள்ளார் பிரீத்தி. இன்னொரு பக்கம், தனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிடவும், அது சம்பந்தமான அதிருப்தியிலும் இருந்துள்ளார். இப்போது காதலனும் இப்படி பேசியதால் நொந்து போன பிரீத்தி, அன்று இரவே தாத்தா வீட்டுக்கு வந்த பிரீத்தி, திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications