ஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்
இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்
Recommended Video
கோவை: "ஏம்மா.. கடன் வாங்கினே.. இருக்கிற பிரச்சனை நமக்கு போதாதா.. கடன் வாங்கிதான் எனக்கு கல்யாணம் செய்யணுமா? " என்று மனம் நொந்து வருத்தப்பட்ட இளம்பெண் தற்கொலையே செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தம்பதி சந்திரன் - மோகனா. இவர்களுக்கு 21 வயதில் சத்யா என்ற மகளும், 18 வயதில் பிரவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 2 வருஷத்துக்கு முன்பு சந்திரன் இறந்துவிடவும், மோகனா, தன் 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு கோவை வந்தார். பீடம்பள்ளி பகுதியில் தங்கி விவசாய கூலி வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றினார்.
இந்த சமயத்தில், சத்யாவுக்கு கோவையை சேர்ந்த ஒரு இளைஞரை பார்த்து கல்யாணத்துக்கு பேசி முடித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயமும் நடந்து முடிந்தது. அடுத்த மாசம் கல்யாண தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று காலையில் இருந்து சத்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தினரும் தேடி பார்க்க ஆரம்பித்தனர்.

பிரேத பரிசோதனை
அப்போதுதான், அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார். தகவலறிந்து சூலூர் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடிதான் சத்யாவை உடலை மேலே கொண்டுவந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

கடன்
விசாரணையில், சந்திரனுக்கு நிறைய கடன் இருந்திருக்கிறது.. கடனாளியாகவே குடும்பத்தினரை விட்டு அவர் இறந்துவிட்டார்.. அந்த கடனை கடனை அடைக்கதான் மோகனா கோவைக்கே வந்து கூலி வேலை செய்ய ஆரம்பித்தார். கிடைத்த வருமானத்தில் குடும்பத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக கடனையுடம் அடைத்து வந்திருக்கிறார்.

மனகஷ்டம்
மகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிவிடவும், இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி உள்ளார் மோகனா. இதுதான் மகளுக்கு மனகஷ்டத்தை தந்தது. ஏற்கனவே கடன் இருக்கும்போது, இன்னும் எதுக்காக கடன் வாங்கினீங்க என்று சத்யா கேட்டிருக்கிறார். இதனாலேயே மனம் நொந்து கிணற்றில் சத்யா குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

சோகம்
எனினும் சத்யா இறப்புக்கு முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால் விசாரணை நடக்கிறது. பெற்ற தாய் படும் அவஸ்தையை பார்க்க முடியாமலும், தன்னால் அம்மா மேலும் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும் சத்யா தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரிய சோகத்தை தந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications