ராத்திரி நேரத்தில்.. மறுத்த பெண்.. வற்புறுத்திய இளைஞர்.. ஆத்திரத்தில் கத்திகுத்து.. கோவையில் துயரம்!
காதலிக்க வற்புறுத்தி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார் இளைஞர்
கோவை: ராத்திரி நேரத்தில் பெண்ணை வற்புறுத்தவும்.. கடைசியில் கத்தியால் குத்தி கொலை வரை விவகாரம் சென்றுவிட்டது.. இளைஞரின் ஆத்திரத்தினால் ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
கோவையில் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ்.. 22 வயதாகிறது.. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே ஊரை சேர்ந்த சக்திவேலின் மகள் ஐஸ்வர்யா என்பவரை காதலித்தார்.. அந்த பெண்ணும் இவரை காதலித்தார்.. 6 மாத காதல் இது.. இவர்கள் இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென ஐஸ்வர்யா ரத்தீஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்... இதனால் சில நாட்களாகவே மன வருத்தத்தில் இருந்தார் ரத்தீஷ்.. நேற்றிரவு ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற ரத்தீஷ் தன்னிடம் ஏன் பேசவில்லை என்றும், மறுபடியும் தன்னை பழைய மாதிரியே காதலிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் ஐஸ்வர்யா, காதலிக்க இஷ்டம் இல்லை என்று கறாராக சொல்லியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரத்திஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றிலும் கையிலும் மாறி மாறி குத்திவிட்டார்.. அவரது அலறல் சத்தத்தை கேட்டு, ஐஸ்வர்யாவின் அப்பா சக்திவேல் ஓடிவந்தார்.
ரத்த வெள்ளத்தில் மகள் விழுந்து கிடப்பதை கண்டு, அவரை காப்பாற்ற முயன்றார்.. ஆனால், அவரையும் கத்தியால் ரத்தீஷ் குத்திவிட்டார்.. இவர்கள் 2 பேரின் அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரத்தீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பிறகு தந்தை - மகள் இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.. 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜஸ்வர்யா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்..
தப்பி ஓடிய ரத்தீஷை பேரூர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்தும் வருகின்றனர்.. காதலிக்க மறுத்ததாலும், தான் காதலித்த பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்திலும், பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
-
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications