கோவை கல்லூரி மாணவியை உறவினரே கொன்ற கொடூரம்.. கொன்றது ஏன்.. விசாரணையில் பகீர் தகவல்!
Recommended Video

ஒட்டன்சத்திரம்: கோவை கல்லூரி மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த உறவினரே கொடூரமான முறையில் மாணவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவை ராமகிருஷ்ணா கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து பிரகதி புறப்பட்டு சென்றுள்ளார்.

சடலம்
இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் அரை நிர்வாண நிலையில் பிரகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உறவினர்
இதையடுத்து கல்லூரியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சதீஷ் என்ற இளைஞருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ், பிரகதிக்கு உறவினராவார்.

நிச்சயம்
ஏற்கெனவே திருமணமான சதீஷ், பிரகதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை பிரகதி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது.

கொலை
இதையறிந்த சதீஷ், பிரகதி மேல் இருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதை இவர் மட்டுமே செய்திருக்க முடியாது என்பதால் இந்த கொலைக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications