இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய, சஜித் உட்பட 35 பேர் வேட்பாளர்கள்- இறுதிப் பட்டியல் வெளியீடு
Recommended Video
கொழும்பு: இலங்கையின் 8-வது அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே, சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் போட்டியிடுவதாக அந்நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியா நேற்று வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தபாய ராஜபக்சே, ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா உள்ளிட்ட 35 பேர் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் 2 புத்த பிக்குகள், முஸ்லிம் சமூகத்தினர் 4 பேர், 2 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்சே இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications