சிங்கள தாதா அங்கொட லொக்கா கொலையா இல்லையா.. இல்லாட்டி டிராமாவா.. இலங்கை போலீஸுக்கு டவுட்!
கொழும்பு: பெங்களூருவில் சிங்கள தாதா அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுவதே பக்கா நாடகமாக இருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, சென்னைக்கு தப்பி வந்தார். சென்னை போலீசில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த லொக்கா, பெங்களூருக்கு ஓடி தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜூலை 3-ந் தேதியே லொக்கா, விஷம் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாகவும் தமிழகத்தின் கோயம்புத்தூரில் அவர் எரிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்தது.
இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அங்கொட லொக்காவின் கொலை குறித்து பெங்களூரு போலீசாரிடம் நாம் கேட்டபோது, அப்படியான ஒரு தகவல் எதுவுமே இல்லை என கூறினர். தமிழக போலீஸ் தரப்பில் லொக்கா கொலை குறித்து தகவல் எதுவும் இல்லை என கூறப்பட்டது.
இதனிடையே இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஜோலிய சேனா ரத்ன, லொக்கா கொல்லப்பட்டாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் அப்படி கொல்லப்பட்டதாக நாடகமாடி இந்தியாவிலேயே வேறு பெயரில் லொக்கா பதுங்கவோ அல்லது இலங்கைக்கு வேறு பெயரில் திரும்பி தமது ராஜ்யத்தை மீண்டும் நடத்தவோ திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications