Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேணாம்.. ஆபத்து! இப்ப இலங்கை போகாதீங்க... நாட்டு மக்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா அரசு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் அங்கு நிலவும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயண திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு ஆஸ்திரேலிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தவறான பொருளாதார கொள்கை

தவறான பொருளாதார கொள்கை

இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

போராட்டத்தில் வன்முறை

போராட்டத்தில் வன்முறை

இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்‌ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.

தலைமறைவான மகிந்த ராஜபக்‌ஷே

தலைமறைவான மகிந்த ராஜபக்‌ஷே

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார். பொதுமக்கள் ராஜபக்‌ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களின் எழுச்சியால் தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்‌ஷே இலங்கை திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அரசு இடங்கள், ராஜபக்‌ஷேக்களின் சொத்துக்களுக்கு தீ வைத்து வருவதால் எரிபொருள் விநியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இலங்கை பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் நேற்றிரவு தீவிர ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 13 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வெளியில் செல்லலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டு இருக்கிறது.

சுட்டுத்தள்ள உத்தரவு

சுட்டுத்தள்ள உத்தரவு

அதே நேரம் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோர் பொதுசொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நேற்று வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் ஆங்காங்கே சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை போலீசார் நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Recommended Video

    Who Is Gnana Akka? | சிங்களர்கள் தேடி தேடி தீ வைத்த Gnana Akka Hotel | Oneindia Tamil
    ஆஸ்திரேலியா எச்சரிக்கை

    ஆஸ்திரேலியா எச்சரிக்கை

    இந்தநிலையில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தங்கள் நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயண திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பல இடங்களில் நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளதாலும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது இலங்கை செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா, அங்கு இருங்கு தங்கள் நாட்டு மக்கள் போராட்டக்களங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஊடகங்களை தொடர்ந்து கவனித்து வருமாறும் எச்சரித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+