பசில் ராஜபக்சேவும் இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு ஓட்டம்-முடிவுக்கு வந்த கொடுங்கோலர்கள் சகாப்தம்!
கொழும்பு: இலங்கையை ஆட்டுவித்த ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, அமெரிக்காவுக்கு தப்பி சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
Recommended Video
ராஜபக்சே சகோதரர்களில் இளையவர் பசில் ராஜபக்சே. ஏற்கனவே அமெரிக்கா குடியுரிமை பெற்றவர். இலங்கையில் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அமெரிக்காவுக்கு தப்பிச்செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

மகிந்த ராஜினமா
பொருளாதார நெருக்கடி விவகாரத்தில் மக்கள் கொந்தளிப்பால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அப்போது தமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்தவர் பசில் ராஜபக்சே. ஆனால் இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டார்.

பசில் ராஜினாமா
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பசில் ராஜபக்சே, தமது அமைச்சர் பதவி, எம்.பி. பதவி அத்தனையையும் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அன்றே, மனைவியை அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்துவிட்டார். இலங்கையில் போராட்டங்களும் மக்கள் கொந்தளிப்பும் ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தப்பி ஓட முயற்சி- தடுத்து நிறுத்தம்
இதன் உச்சமாக இலங்கை ஜனாதிபதி மாளிகையும் போராட்டக்காரர்கள் வசமானது. ஜனாதிபதி மாளிகையில் இருந்த பசிலின் அண்ணன் கோத்தபாய உயிருக்கு அஞ்சி தப்பி ஓடினார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு தப்பி ஓடுவது என முடிவு செய்தார். இதனையடுத்து கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றார் பசில். ஆனால் சிறப்பு பிரமுகர்களுக்கான சேவைகளை வழங்க முடியாது என விமான நிலைய அதிகாரிகள் மறுத்தனர்; அதேபோல் பசில் ராஜபக்சேவை தப்ப விடக் கூடாது என பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பசில் ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவுக்கு எஸ்கேப்
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த இலங்கைக்கான இந்திய தூதரகம், கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்சேக்கள் தப்பி ஓடியதில் இந்தியாவின் பங்கு எதுவும் இல்லை என கூறப்பட்டிருந்தது. இதனால் பசில் ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறியதும் உறுதியானது. இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ள ஊடகங்கள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர் பசில் ராஜபக்சே. அதனால் பசில் ராஜபக்சே, இலங்கையைவிட்டு வெளியேறுவதை தடுக்க இயலாது. ஆகையால் பசில் ராஜபக்சேவின் தப்பி ஓட்டம் சாத்தியமானது என தெரிவித்துள்ளன.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications