செம்மணி கண்ணீர், பாகம் 2: மனித புதைகுழி உள்ளே.. மனித குலம் காணாத கொடூர காட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு, இலங்கையின் கடந்த காலத்தின் இருண்ட பக்கத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பிப்ரவரி 2025 இல் செம்மணி இந்து மயானத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. சட்டப்பூர்வ அகழ்வாராய்ச்சிகளில், குழந்தைகள் உட்பட 65க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தமிழர்களையும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இ ந்த சம்பவத்தை "ஒன்இந்தியாதமிழ்" சிறப்பு நிருபர் கஜிந்தன் நேரடியாக களத்தில் இருந்து செய்தி சேகரித்து வருகிறார். இது குறித்த தொடர் கட்டுரையின் முதல் அத்தியாயம் இந்த படுகொலையின் பின்னணியை அறிமுகப்படுத்தியது. இதன் இரண்டாம் பாகம் இந்தக் கட்டுரை.

கொடூர காட்சிகள்

2025ம் ஆண்டு, பிப்ரவரியில் கொக்குவில் பகுதியில் தொடங்கியுள்ள புதிய அகழ்வாய்வுப் பணிகள், தடயவியல் நிபுணர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் மன உளைச்சலைத் தரும் காட்சிகளை முன்வைக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட 65க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளில், குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்புகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாயும் குழந்தையும் கட்டிப்பிடித்தபடி உள்ள எலும்புக் கூடு நெஞ்சை உருக்கிப்போட்டது. ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டுடன், பச்சை நிறப் பாடசாலைப் பை ஒன்றும், கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாயத்து ஒன்றும், சில விளையாட்டுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டபோது, அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மற்றும் அங்கிருந்த உறவினர்களும் கண்ணீர் சிந்தினர்.

Sri Lanka Jaffna

எலும்புகளை துளைத்த துப்பாக்கி குண்டுகள்

இத்தகைய தடயங்கள், இங்கு புதைக்கப்பட்டவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. தடயவியல் நிபுணர்களின் கருத்துப்படி, சில எலும்புக்கூடுகளில் துப்பாக்கிக் குண்டுத் துளைத்ததற்கான அடையாளங்களும், சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்களும் காணப்படுகின்றன. அதாவது எலும்புகள் உடைக்கப்படும் அளவுக்கு கொடுமைப்படுத்தி கடும் ரண வேதனையை உருவாக்கி பிறகு கொலை செய்துள்ளனர் கொடூரர்கள். பல உடல்கள் அவசர அவசரமாக, சடலத்திற்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையின்றி ஒரே குழியில் வீசி எறியப்பட்டிருப்பதையும் எலும்புக்கூடுகளின் நிலை காட்டுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வக்கீல்கள், இந்த அகழ்வாய்வு நடைபெறும் ஒவ்வொரு நொடியையும் ஆவணப்படுத்தி வருகின்றனர். அவர்கள் கூறுகையில், "இந்த அகழ்வாய்வு வெறும் எலும்புகளைக் கண்டுபிடிப்பதற்கானது அல்ல. இது, திட்டமிட்ட இனப்படுகொலையின் சான்றுகளைத் திரட்டும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி. ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு எலும்பும் ஒரு கதையைச் சொல்கிறது. அந்த உண்மைகளை அழித்துவிடவோ, சிதைத்துவிடவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்கின்றனர்.

செம்மணியில் புதைந்த எதிர்காலம்

இந்த அகழ்வாய்வின் போது, நிலத்தின் கீழ் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு தடயமும், இலங்கையின் பொறுப்புக்கூறல் நடைமுறையின் மீதான நம்பிக்கையின்மையை ஆழமாக்குகிறது. குழந்தைகளின் எச்சங்கள், போரின் மிகக் குரூரமான முகத்தை உலகுக்குக் காட்டுகின்றன. செம்மணியில் புதைக்கப்பட்டது உடல்கள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்காலமும், கனவுகளும்தான் என்பதை இந்தப் புதிய தடயங்கள் உரக்கச் சொல்கின்றன.

கருணாஸ் கண்டனம்

இந்த நிலையில்தான், நமது செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்திலும், செம்மணி புதைகுழிகளுக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளன. முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ், எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன.தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மணி மனிதப் புதை குழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். மேலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+