கொரோனாவையும் ஆயுதமாக்கி இலங்கையை அடுத்தடுத்து கபளீகரம் செய்யும் சீனா.. விழிபிதுங்கும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்குள் நுழைவதற்கு ஒருகாலத்தில் தயங்கி தயங்கி நின்ற சீனா, இப்போது அசுரவேகத்தில் அந்த நாட்டை அப்படியே கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தையும் கூட தம்முடைய நாடுபிடி வேட்டைக்காக பயன்படுத்தி வருகிறது சீனா.

Recommended Video

    Sri Lanka-வை அடுத்தடுத்து கபளீகரம் செய்யும் China | Oneindia Tamil

    இலங்கையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 3,000க்கும் கீழே இருந்து வருகிறது. அதேபோல் ஒருநாள் கொரோனா மரணங்களும் 30க்கும் கீழே இருந்து வருகிறது. இது அண்மைக்காலத்தில் மிக அதிகமான பாதிப்பாக கருதப்படுகிறது.

    இலங்கையில் சுகாதார வசதிகள் சிறப்பானதாக இருந்த போதும் தற்போது கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறது இலங்கை. பொதுவாக இலங்கைக்கு உதவி செய்வதில் இந்தியா முனைப்பு காட்டுவது வழக்கம்.

    தடுமாறும் மத்திய அரசு

    தடுமாறும் மத்திய அரசு

    இம்முறை இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் மிகப் பெரும் போராட்டத்துடன் கொரோனாவை எதிர் கொண்டு வருகின்றன. சொந்த நாட்டின் மாநிலங்களின் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில்தான் மத்திய அரசு இருந்து வருகிறது. இதுவே கடும் விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டும் உள்ளது.

    இலங்கையில் சீனா

    இலங்கையில் சீனா

    இந்நிலையில் அண்டை நாடான இலங்கைக்கு எந்த வகையிலும் இந்தியா உதவும் நிலையில் இல்லை. ஏற்கனவே இலங்கை விவகாரங்களில் இந்தியா அடுத்தடுத்து பல சரிவுகளை எதிர்கொண்டுள்ளது. சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுகநகரத்துக்கு, இலங்கை சுயாட்சி அந்தஸ்து வழங்கிவிட்டது. இதனை இந்தியாவால் தடுக்க முடியாமல் போய்விட்டது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.

    மன்னார் வளைகுடாவில் சீனா

    மன்னார் வளைகுடாவில் சீனா

    முன்னதாக மன்னார் வளைகுடா பகுதியில் மிக பிரமாண்டமான காற்றாலையை அமைக்க சீனாவுக்கு அனுமதி கொடுத்தது இலங்கை. இந்த காற்றாலையைப் பெற இந்தியா முயற்சித்தும் இலங்கை, சீனாவின் பக்கமே நின்றது. இப்படி இலங்கையில் சீனாவின் கை அடுத்தடுத்து ஓங்கி வருகிறது.

    கொரோனா தடுப்பூசிகள்

    கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா ஏற்கனவே ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் இந்தியாவினால் இந்த தடுப்பூசிகளை வழங்க முடியாமல் உள்ளது. தற்போது இந்தியா உதவ இயலாத நிலையையும் சீனா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

    சீனாவின் தடுப்பூசிகள்

    சீனாவின் 11 லட்சம் சைனாபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 6 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள், இலங்கைக்கு கொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 5 லட்சம் தடுப்பூசிகளை சீனா கொடுத்திருக்கிறது. இப்படி சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து கொண்டே இருப்பது இந்த பிராந்தியத்துக்கே பெரும் கேடாக இருக்கப் போகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+