Flash Back: பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை நின்றார்-பொன்சேகா;போரிட்டே வீர மரணமடைந்தார் -கேபி
பிரபாகரன் கடைசிவரை போராடினார் என்பது இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் கருத்து.
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக பிரபாகரன் கடைசி வரை போரிட்டு மரணமடைந்தார் என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, பிரபாகரனின் நெருங்கிய சகாவான கேபி ஆகியோர் கூறி வந்தனர்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கான தமிழீழத் தனிநாடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கை ராணுவத்துடனான இந்த யுத்தம் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமான இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக- கைவிடுவதாக அறிவித்தனர். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தளபதிகள் அனைவரும் யுத்தத்தில் மரணம் அடைந்தனர் என கூறப்பட்டது.
இது தொடர்பான பல்வேறு கருத்துகளை இலங்கை ராணுவத் தரப்பு கூறி வந்தது. பிரபாகரன் உயிரிழந்ததாக தொடர்ந்து கூறிவந்தவர் அப்போதைய இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா. இது தொடர்பாக சரத் பொன்சேகா கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார். விடுதலைப் புலிகளின் கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசியல்வாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். பிரபாகரனும் அப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த வடக்கும் கிழகும் அவரது கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்திருந்தன. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்கு உலக நாடுகள் அந்த போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்பு காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு அப்போது வேறானதாக இருந்தது என கூறியிருந்தார்.

பிரபாகரனின் நெருங்கிய சகாவான கேபி என்ற குமரன் பத்மநாபன், பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. அதனை காஸ்ட்ரோ தருவதாகக் கூறினார். ஆனால் கடைசி வரை தரவே இல்லை. பிரபாகரனைக் காப்பாற்றிய பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே என்று அவர்களுக்குப் பொறாமை. அதனால்தான் இப்படி ஆனது. இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம். அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது. அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன். ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது என கூறியிருந்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications