இலங்கை திரும்பும் கோத்தபாய ராஜபக்சே- காத்திருக்கும் பிரதமர் பதவி- ராஜினாமா செய்யும் பெண் எம்.பி.!
கொழும்பு: இலங்கையில் மீண்டும் அரசியல் களம் பெரும் பரபரப்பாகிவிட்டது. நாட்டை விட்டு தப்பி ஓடி தாய்லாந்தில் தற்போது தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜ்பக்சே, இலங்கை திரும்ப உள்ளதாகவும்; அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
Recommended Video
இலங்கையின் பொருளாதர பேரழிவைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சிதான் ராஜபக்சே குடும்பத்தினரின் அரசியல் அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதுகிறது எனக் கூறப்பட்டது.

மக்கள் போராட்டங்களால் முதலில் பிரதமர் பதவியை பறிகொடுத்தார் மகிந்த ராஜபக்சே. ஆனாலும் மக்களின் ஆவேசம் அடங்காத நிலையில் போராட்டம் தொடர்ந்தது. இலங்கை ஜனாதிபதி மாளிகையையே பொதுமக்கள் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு அஞ்சி ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டே தப்பி ஓடிவிட்டார்.
இலங்கையில் இருந்து முதலில் மாலத்தீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. தற்போது தாய்லாந்தில் ஏறக்குறைய வீட்டுச் சிறையில் அடைபட்டது போல முடங்கிக் கிடக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. அமெரிக்கா குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு கோத்தபாய ராஜபக்சே இடைவிடாமல் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்தான் தாய்லாந்தில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜ்பக்சே இலங்கைக்கு ஆக.24-ல் மீண்டும் திரும்ப போகிறார் என செய்திகள் வெளியாகின. இதனை கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தன. மேலும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோத்தபாய ராஜினாமா செய்ததால் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கே தரப்பு, அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில் நியமன எம்.பி.யாக கோத்தபாய ராஜபக்சே மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்காக சீதா அரம்பேபொல என்ற பெண் எம்.பி. தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி எம்.பியாக கோத்தபாய ராஜபக்சே மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தால் ரணில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவார் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
இதனிடையே கோத்தபாய கோஷ்டி தங்களுக்கு அனுதாபத்தை உருவாக்கிக் கொள்ளவே இத்தகைய தகவல்களைப் பரப்புவதாகவும் பசில் ராஜபக்சேதான் இந்த சம்பவங்களின் சூத்திரதாரி என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications