கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்கே அடிச்சாதான் வலிக்கும்.. ராஜபக்சே குடும்பத்தை எமோஷனலாக நிலைகுலைய வைத்த சிங்களர்கள்.. போச்சே!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ஆளும் ராஜபக்சே தரப்பிற்கு எதிராக கடுமையாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்த்து மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார்.

Recommended Video

    Politics பேசுவோம் | Hero-வாக பார்க்கப்பட்ட Mahinda Rajapaksa வீழ்ந்தது எப்படி?

    இன்னொரு பக்கம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்கள் முன் போராட்டத்தில் நடந்த கலவரத்தில் அங்கு 10 பேர் வரை கொல்லப்பட்டனர். எம்பி அமரகீர்த்தி இந்த கலவரத்தில் பலியானார்.

    தற்போது இலங்கையில் புதிய பிரதமர் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

    சுட்டுத்தள்ள உத்தரவு.. மே 13 ஆம் தேதி வரை இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு - கொந்தளிப்பில் மக்கள் சுட்டுத்தள்ள உத்தரவு.. மே 13 ஆம் தேதி வரை இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு - கொந்தளிப்பில் மக்கள்

    இலங்கை

    இலங்கை

    இதை தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இலங்கையில் ராஜபக்சேவின் குடும்பம் எமோஷனலாக நிலைகுலைந்து இருப்பதாக இலங்கை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டாலும், அரசுக்கு எதிராக 2 மாதத்திற்கு மேலாக போராட்டம் நடந்தாலும்.. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சேவை நிலைகுலைய வைத்துள்ளதாம்.

     ரணில் விக்ரமசிங்க

    ரணில் விக்ரமசிங்க

    இலங்கை கலவரத்திற்கு இடையிலான ஹாம்பான்டோ பகுதியில் இருக்கும் ராஜபக்சே மியூசியம் இடித்து தள்ளப்பட்டது. இலங்கையின் தெற்கு பகுதியில் இருக்கும் மியூசியம் ஆகும் இது. ராஜபக்சே குடும்பம் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ஹாம்பான்டோ பகுதியில்தான் இந்த மியூசியம் அமைந்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தின் மொத்த வரலாறும், பெருமைகளும் அடங்கிய மியூசியம் ஆகும் இது.

    ராஜபக்சே

    ராஜபக்சே

    ராஜபக்சேக்களின் தந்தை டான் ஆல்வின் ராஜபக்சே என்று முன்னாள் எம்பியின் புகைப்படங்கள், அரிய குழந்தை பருவம் பற்றிய போட்டோக்கள், சிலைகள் இங்கே உள்ளன. இவர்களை தயார் டான்டினா ஆகியோரின் புகைப்படமும் இங்கே உள்ளது. அவர்கள் பயன்படுத்திய உடை, வீட்டில் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் எழுதிய டைரிகள், கடிதங்கள் என்று பல விஷயங்கள் இங்கே உள்ளன., இவர்களின் மெழுகு சிலையும் இங்கே இருக்கிறது.

    மியூசியம்

    மியூசியம்

    மகிந்த ராஜ்பக்சே பார்த்து பார்த்து கட்டிய கட்டிடம் இது. எங்கள் குடும்பம்தான் இலங்கையில் எல்லாம் என்பதை உணர்த்தும் வகையில் ராஜபக்சே எழுப்பிய கட்டிடம் இது. 2014ல் இலங்கையில் மகிந்த அதிபராக இருக்கும் போது இந்த மியூசியத்தை கட்டினார். தனியார் நிலத்தில் கட்டினாலும், சொந்த பணத்தில் கட்டாமல் அரசு பணத்தில் கட்டியதாக இவர் மீது புகார் உள்ளது. இலங்கையின் கடற்படை ஆட்களை வைத்து இந்த கட்டிடத்தை அவர் கட்டினார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது.

    அரசு பணம்

    அரசு பணம்

    அரசு பணத்தை இவர் பயன்படுத்தியதாக கூறி ஊழல் புகாரும் வைங்கப்பட்டு, பின்னர் மீண்டும் ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வந்ததும், புகார்கள் வாபஸ் வாங்கப்பட்டது. $460,000 வரை ஊழல் செய்ததாக அப்போது இவர் மீது புகார் வைக்கப்பட்டது. மகிந்த மிகவும் ஆசை ஆசையாக இந்த மியூசியத்தை கட்டினார். இந்த நிலையில்தான் அந்த மியூசியத்தை மக்கள் அடித்து வீழ்த்தி உள்ளனர். உள்ளே இருந்த ராஜபக்சே பொக்கிஷமாக கருதிய விஷயங்கள் எல்லாம் அடித்து வீழ்த்தப்பட்டது.

    எமோஷனல் தாக்குதல்

    எமோஷனல் தாக்குதல்

    இந்த விஷயம்தான் எமோஷனலாக ராஜபக்சே குடும்பத்தை சீண்டியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது இந்த மியூசியம் அழிக்கப்பட்டதை ராஜபக்சே குடும்பம் மிகவும் எமோஷனலாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இங்கே அடிச்சாதான் வலிக்கும் என்று சிங்களர்கள் அந்த இடத்தை தாக்கி உள்ளனர். இதன்பின் டான் ஆல்வின் ராஜபக்சே சிலையும் நீக்கப்பட்டது. இதையடுத்தே கோத்தபய ராஜபக்சே பொறுமை இழந்தார்.

    ராணுவம் இறங்கியது

    ராணுவம் இறங்கியது

    இலங்கைக்குள் ராணுவத்தை களமிறங்கினார். போராட்டம் செய்யும் போது கலவரம் செய்பவர்கள் மீது கண்டதும் சுட உத்தரவிட்டார்.சிலைகளை இடிக்கும் நபர்களை மன்னிக்க முடியாது என்று கூறினார். எமோஷனலாக காயப்பட்டதால் அவர் இப்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்த போது.. தமிழர்களின் அடையாளங்களை அழித்த ராஜபக்சே குடும்பம்.. தற்போது தன்னுடைய வரலாற்றை இழந்து நிற்கிறது!

    English summary
    How does Sri Lanka's demolishing the museum hurt the Rajapaksa family sentiment? இலங்கையில் ஆளும் ராஜபக்சே தரப்பிற்கு எதிராக கடுமையாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X