கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடாஃபி போல அடிச்சே கொல்லுவாங்களோ?அலரி மாளிகையில் விடிய விடிய மரணபீதியில் அலறி கிடந்த மகிந்த ராஜபக்சே

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே பாதுகாப்பாக எப்படி வெளியேற்றப்பட்டார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பிடியில் சிக்கி செத்துவிடுவோமா? என்கிற மரண பீதியில் மகிந்த ராஜபக்சே இருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    SriLanka நிலைமை இது தான் | தமிழர்கள் சாபம் சும்மா விடுமா? | Oneindia Tamil

    ஈரோட்டில் நின்று சவால் விட்ட வாசன்.. ஈரோட்டில் நின்று சவால் விட்ட வாசன்..

    கொழும்பு காலிமுகத் திடலில் அமைதிவழி போராட்டம் நடத்தியவர்களை சீண்டிப் பார்த்தது மகிந்த ராஜபக்சே ஏவிவிட்ட கும்பல். ஆனால் பொதுமக்களோ அந்த காடையர் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் கொழும்புடன் நிற்கவில்லை என்பதுதான் ட்விஸ்ட்.

    தென்னிலங்கையில் தீ வைப்பு

    தென்னிலங்கையில் தீ வைப்பு

    கொழும்பு வன்முறை சம்பவங்களாள் கொந்தளித்துப் போனது தென்னிலங்கை. ஒட்டுமொத்த தென்னிலங்கையிலும் ராஜபக்சே ஆதரவு அரசியல் தலைவர்கள் அத்தனை பேரின் வீடுகளிலும் பற்றி எரிந்தன. நள்ளிரவைத் தாண்டியும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்தன.

    மகிந்த ராஜபக்சே முற்றுகை

    மகிந்த ராஜபக்சே முற்றுகை


    அதேநேரத்தில் கொழும்பு அலரி மாளிகையில் சகாக்களுடன் மகிந்த ராஜபக்சே ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பின்னிரவு நேரமான போதும் காலிமுகத்திடலில் முகாமிட்டிருந்த போராட்டக் குழுவினரின் ஒரு பகுதி அலரி மாளிகையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியது. அலரிமாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே போனதால் பெரும் பதற்றம் நிலவியது.

    கடாஃபி கதிதானா?

    கடாஃபி கதிதானா?

    போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்குள் எந்த நேரத்திலும் தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே நுழையலாம் என்கிற உச்சகட்ட பதற்றம். அப்படி உள்ளே நுழைந்தால் கடந்த காலங்களில் முசோலினியைப் போல, கடாஃபியை போல பொதுமக்களாள் அடித்தே மகிந்த ராஜபக்சே கொல்லப்படலாம் என்கிற நிலைமை. அந்த சூழ்நிலையில்தான் போராட்டக்காரர்களுடன் சட்டவல்லுநர்கள் குழு ஒன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

    அவகாசத்தால் தப்பிய மகிந்த

    அவகாசத்தால் தப்பிய மகிந்த

    அப்பேச்சுவார்த்தையின் போது, அலரி மாளிகை முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டுவிட்டால் போதும்; இல்லை எனில் ராணுவம் உங்கள் மீது தாக்குதல் நடத்தி மகிந்த ராஜபக்சேவை மீட்டுச் செல்லும். எது வசதி என பார்த்து கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் மீது தாக்குதல் என்ற பெயரில் காலிமுகத் திடலில் முகாமிட்டுள்ளவர்களையும் ராணுவம் அழித்துவிடுமோ என்ற அச்சத்தில் போராட்டக்குழு ராஜபக்சே அண்ட்கோவுக்கு அவகாசம் வழங்கியது. இதனையடுத்து அலரி மாளிகை முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது; உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் அலரி மாளிகையைவிட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறி ஹெலிகாப்டர் மூலம் தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் தஞ்சமடைந்துள்ளனர் என்கின்றன அச்செய்திகள்.

    English summary
    After the Hours long Talks with the Anti-Govt Protestors, Mahinda Rajapaksa had escaped from Colombo, sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X