கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான்தான் பிரதமராக தொடர்கிறேன்.. ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பால் இலங்கையில் பெரும் குழப்பம்

Google Oneindia Tamil News

கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமனம் செய்துள்ளது சட்டப்படி தவறானது என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்னும் தான் தான் பிரதமராக தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளதால் இலங்கையில் அரசியல் சாசன சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிவி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் இப்போது நடைபெற்றுள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கை. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

I will remain Srilanka PM, says Ranil Wickremesinghe as country heads towards constitutional crisis

எனவே நான் தான் பிரதமராக தொடர்கிறேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் கூறுகையில், மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் விமர்சகர்கள் இதுபற்றி கூறும்போது, அந்த நாட்டு அரசியல் சாசனத்தின் 19ஆவது திருத்தத்தின்படி மெஜாரிட்டி இல்லாத அதிபர் ராஜபக்ஷவால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்க முடியாது என்று தெரிவிக்கிறார்கள். எனவே இப்போது இலங்கையில் இரு பிரதமர்கள் பதவி வகிப்பது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

English summary
The swearing in of former president Mahinda Rajapaksa as Sri Lanka's new Prime Minister is "illegal and unconstitutional", sacked premier Ranil Wickremesinghe asserted on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X