Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Srilanka Debt:இலங்கைக்கு ரூ.24,600 கோடி கடன் வழங்க ஐஎம்எஃப் அறிவிப்பு! ஹேப்பி மோடில் ரணில்!

இலங்கைக்கு ரூ24,000 கோடி கடனுதவி வழங்க ஐஎம்எப் ஒப்புதல் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு சர்வதேச (நாணய) நிதியமான ஐ.எம்.எப். ரூ24,000 கோடி கடன் பெறுவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, கடன்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளக் கூடிய சக்தி இலங்கைக்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றார்.

இலங்கையில் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்தனர். இலங்கையின் பொருளாதாரத்தை ராஜபக்சே குடும்பம் சூறையாடியது. இதனால் இலங்கை நாடு பெரும் பொருளாதார சீரழிவை எதிர்நோக்கியது.

Ranil Wickremesinghe happy- IMF approves Sri Lankas $3 billion bailout

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை மிக கடுமையாக உயர்ந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தன்னெழுச்சியான கிளர்ச்சியில் இறங்கினர். இலங்கை தலைநகர் கொழும்பு போராட்ட களமாக உருமாறியது.

இலங்கையில் பொதுமக்களின் இடைவிடாத அமைதிவழிப் போராட்டம் சில நேரங்களில் உச்சகட்ட வன்முறையை எட்டியது. இதனால் உயிருக்கு பயந்து முதலில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டே தப்பி ஓடினார். அதே பாணியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜ்பக்சேவும் இலங்கையைவிட்டு தப்பி ஓடி வெளிநாடுகளில் பதுங்கி வாழ்ந்தார். இதனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் கடன் சிக்கலை தீர்த்து, பொருளாதார குழப்பங்களை ரணில் விக்கிரமசிங்கே சரி செய்வார் என்பது அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இலங்கையால் இம்மியளவு கூட நிலைமையை சீரமைக்க முடியவில்லை. இந்திய அரசும் ஏராளமான நிதி உதவியை வாரி வழங்கியது. அதேநேரத்தில் சீனாவிடமும் பெருமளவும் கடன் பெற்றது இலங்கை.

Ranil Wickremesinghe happy- IMF approves Sri Lankas $3 billion bailout

அத்துடன் சர்வதேச நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்காக சர்வதேச (நாணய) நிதியத்திடமும் போராடி வந்தது. இதில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவே முதலில் கடிதம் வழங்கியது. இந்த நிலையில்தான் இலங்கை ரூ24,000 கோடி கடனுதவி பெறுவதற்கான ஒப்புதலை சர்வதேச நிதி நிறுவனம் வழங்கி இருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கு கடன்களை ஒழுங்குபடுத்திக் கொள்கிற சக்தி இருப்பதாக சர்வதேசம் அங்கீரித்துள்ளது. இனி இலங்கை பொருளாதாரத்தில் திவாலாகாது என்ற நம்பிக்கை உள்ளது. இனி அன்னிய செலாவணி அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்றார் நம்பிக்கையுடன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+