மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் தஞ்சம்? இந்திய தூதரகம் முக்கிய விளக்கம்
கொழும்பு: இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இருப்பினும், இலங்கை அரசு எடுத்த முயற்சிக்கு எதுவும் பெரிய பலன் கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட அங்கு விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது.
Recommended Video

இலங்கை
இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக அங்குள்ள மாணவர்கள் தீவிர போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைய மாணவர்கள் முயன்றனர். அப்போது அவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் மாணவர்கள் சிதறி ஓடியதால், அந்த இடமே முழுக்க போர்க்களம் போலக் காட்சி அளித்தது.

வன்முறை
இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் அங்கு இப்போது திடீரென வன்முறையாக வெடித்துள்ளது. அரசு உள்ளிட்ட தனியார் சொத்துகளைப் பொதுமக்கள் சேதப்படுத்தி வருகின்றனர், ராஜபக்சவின் பூர்வீக வீடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகளும் கூட தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை அங்கு 8 பேர் பலியாகி உள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் சுத்தமாகப் பயன் அளிக்கவில்லை.

ராஜினாமா
இதையடுத்து பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முதலில் மகிந்த ராஜபக்ச மறுத்தாலும், போராட்டம் மிக கடுமையாக மாறிய நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் போராட்டம் கையை மீறிச் சென்றுவிட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச திருகோணமலை பகுதியில் பதுங்கி உள்ளதாகத் தகவல் வெளியானது.

தஞ்சம்
மேலும், மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த வெளியாகின. மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூட இணையத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இலங்கை தலைவர்கள் யாரும் இலங்கையில் தஞ்சம் அடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

விளக்கம்
இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தனLது ட்விட்டரில், "சில அரசியல் பிரமுகர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இவை அனைத்தும் போலியான மற்றும் தவறான தகவல்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவில் இலங்கை தலைவர்கள் தஞ்சம் என்பதைக் கடுமையாக மறுக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications