Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை வாழ் இந்திய தமிழர் என அழைக்கக் கூடாதாம்.. தனி தேசிய இனமாம்.. இப்படி ஒரு சர்ச்சை!

இலங்கை மலையகத் தமிழர்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்கிறது ஒரு சர்ச்சை குரல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் வாழும் இந்திய தமிழர் என மலையகத் தமிழர்களை அழைக்கக் கூடாது; தங்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய வம்சாவளித் தமிழர்கள் கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த நாட்டுக்கு மலையக தமிழ் மக்கள் கொண்டுவரப்பட்டு இருநூறு வருடங்கள் ஆகின்ற நிலையில் மலையக மக்களின் தேசிய இன உரிமைகளை மறுக்கும் விதமாக அவர்களை "இலங்கை வாழ் இந்தியத் தமிழர்" என்று அழைப்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. யாழ் நண்பர்கள் அமைப்பு இந்திய தூதரகத்துடன் இணைந்து மலையக தேசிய இனத்தை "இலங்கை வாழ் இந்தியத் தமிழர்" என்று குறிப்பிட்டிருப்பது ஒரு வரலாற்றுத் மோசடியாகும். இந்திய மேலாதிக்கத்தின் விஸ்தரிப்பிற்காக யாழ் நண்பர்கள் அமைப்பு மலையக தேசிய இனத்தை கொச்சைப்படுத்தி அவர்களின் தேசிய இன அடையாளத்தை மறுத்துச் சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும் .

Indian origin in Sri Lanka demands to identity with new Nationality

மலையக மக்கள் 1823 ம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் தென் இந்தியாவிலிருந்து கொலனித்துவ கூலி அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் இவ்வருடத்துடன் நிறைவடைகிறது. தொழிற்சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி சக்திகள், புத்திஜீவிகள் எனப் பலரும் மலையக மக்களின் தீர்க்கப்படாமல் இன்றும் தொடரும் பிரச்சனைகள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்கள். மலையக மக்களின் தனித்துவத்தை வலியுறுத்தி வருகிறார்கள், இச்சூழலில் இலங்கை வாழ் இந்திய தமிழர் என அடையாளப்படுத்துவது பல்வேறு உள்நோக்கங்களை கொண்டதாகும்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நெடுங்காலமாக முன்னெடுத்துவருகிறது. மலையக மக்களை நான்கு தேசிய இனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும் படி அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. 1990கள் தொடக்கம் இந்தக் கோரிக்கைக்காகப் போராடும் நாம் நல்லாட்சி என சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் கட்சி சமர்பித்த யாப்பு சீர்த்திருத்தத்திற்கான முன்மொழிவுகளிலும் இவ்விடயத்தை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

Indian origin in Sri Lanka demands to identity with new Nationality

குடியுரிமை மறுக்கப்பட்டு, காணி, வீடு, கல்விபுலம் உட்பட ஏனைய சிவில் சமூகங்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட தேசிய இனமான மலையக மக்களை இப்போது இந்திய வம்சாவளி தமிழர் என்று விழிப்பது கண்டனத்துக்குரியது.
மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

யாழ் முற்போக்கு அமைப்புகளும், பொதுமக்களும் மலையக மக்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த புதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும். மலையக மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரும் இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதோடு அனைவரும் இலங்கை மக்களாகிய மலையக தேசிய இனத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+