இலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்
Recommended Video
கொழும்பு: இலங்கையில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்ல பறக்கும் குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈஸ்டர் தினத்தின் போது நிகழ்த்தப்பட்ட கோர குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாகாணத்தின் பல இடங்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் ராணுவத்தினர் நேற்று முதல் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதலும் நடைபெற்றது.
இதுவரை 15 தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன்கள், வெடிகுண்டு ஜாக்கெட்டுகள், வெடிமருந்துகள் தயாரிக்க இரும்பு குண்டுகள் என ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள், ஈராக் மற்றும் சிரியாவில் ட்ரோன்களில் வெடிகுண்டுகளை நிரப்பி அதன் மூலம் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தி இருக்கின்றனர். இலங்கையிலும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தவே அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.
ஒரே நேரத்தில் அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கிவிட்டு அடுத்தடுத்த இடங்களில் குண்டுவெடிப்புகளை இந்த ட்ரோன்கள் மூலம் நிகழ்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அமெரிக்கா புலனாய்வுத் துறை அதிகாரிகள்.
இதனிடையே அம்பாறையில் தொடர் தேடுதல் நடவடிக்கை நீடிப்பதால் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications