கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மாளிகையான அலரி மாளிகையை விட்டு மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.

Recommended Video

    ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட Mahinda Rajapaksa | mahinda rajapaksa resigns | Oneindia Tamil

    இலங்கையில் கடந்த கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு முதலே பொருளாதார நெருக்கடி இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொருளாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

    Mahinda Rajapaksa ousted from Alagiri Maaligai

    இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்தது. பச்சை மிளகாய் கூட ஒரு கிலோ 1000 த்திற்கு விற்பனை செய்யப்பட்டது. முட்டை, பால், பிரட் என உணவு பொருட்களின் விலையும் விண்ணை முட்டியது.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கட்டுக்குள் கொண்டு வராததை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த் ராஜபக்சவுக்கும் எதிராக திரும்பினர், அவர்கள் பதவி விலக வேண்டும் என போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    அன்று அனுமன் வைத்த தீ... இன்று மக்கள் வைத்த தீ... பற்றி எரியும் இலங்கை - தமிழர்கள் சாபம் விடுமா? அன்று அனுமன் வைத்த தீ... இன்று மக்கள் வைத்த தீ... பற்றி எரியும் இலங்கை - தமிழர்கள் சாபம் விடுமா?

    எனினும் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ராஜபக்ச பிடிவாதம் பிடித்தார். ஆனால் இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் நேற்றைய தினம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எனினும் நேற்று இரவு முதல் இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதிகாலையில் எம்பிக்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தினர்.

    ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Mahinda Rajapaksa ousted from Alagiri Maaligai after he resigned from PM post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X