இலங்கை ராணுவம் வேடிக்கை பார்க்க 30 முஸ்லிம் கிராமங்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் தமிழர்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிவைத்து கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யும் பேரவலம் நிகழ்ந்து வருகிறது. இலங்கையில் இன்னொரு இனப்படுகொலை நடைபெறும் பேராபத்து சூழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை ஒடுக்கி வாழ்வாதாரங்களை சூறையாடி ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்தது சிங்களப் பேரினவாதம். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் தமிழருக்கும் சிங்களவருக்குமான யுத்தம் முடிவடைந்தது.

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈஸ்டர் திருநாளில் மிகக் பெரும் தாக்குதல்களை இலங்கை எதிர்கொண்டது. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 359 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்போது முஸ்லிம்களை குறிவைத்து சிங்கள காடையர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல்

முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் தமிழர்களின் நிறுவனங்களை குறிவைத்து தாக்கி தீக்கிரையாக்கி சூறையாடிய அதே பாணியைத்தான் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை ராணுவத்தினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாக்கி உள்ளன.

பள்ளிவாசல்களுக்கு தீ வைப்பு

பள்ளிவாசல்களுக்கு தீ வைப்பு

கண்ணில்தென்படும் பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து தீக்கிரையாக்கி சேதப்படுவது தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை எரித்து வெறியாட்டம் போட்டிருக்கின்றனர்.

பதுங்கி வாழும் முஸ்லிம்கள்

பதுங்கி வாழும் முஸ்லிம்கள்

முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களை தேடி தேடி சூறையாடி பொருட்களை கொள்ளையிட்டுச் செல்கின்றனர் சிங்கள காடையர்கள். இதுவரை 9 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சியபடி கிராமங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.

அரசியல் ஆதாயத்துக்காக இனப்படுகொலை?

அரசியல் ஆதாயத்துக்காக இனப்படுகொலை?

இலங்கையில் இன்னொரு இனப்படுகொலைக்கான முன்னோட்டமாக தற்போதைய சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதுவும் இலங்கை அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சிங்கள வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் இத்தகைய வெறியட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+