நியூசிலாந்து: பயங்கரவாத தாக்குதல் நடத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் இலங்கை காத்தான்குடி இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி அகமது ஆதில் முகமது சம்சூதீன் (வயது 32) என தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தில் ஆக்லாந்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர் கத்திகள் விற்கும் பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு புதிய கத்தியை எடுத்து மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென், இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த நபர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் கண்காணிக்கப்பட்டு வந்தார். அந்த தீவிரவாதியை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என கூறியிருந்தார்.

இலங்கை காத்தான்குடி

இலங்கை காத்தான்குடி

தற்போது தாக்குதல் நடத்திய இளைஞர் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இலங்கை மட்டக்களப்பு- காத்தான்குடி முதலாம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த முகம்மது சம்சூதீன் ஆதில் என்பவர்தான் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதி. காத்தான்கடை கபூர் கடை வீதியை சேர்ந்த முகமது இஸ்மாயில்- சரிதா தம்பதியினருக்கு 1989-ல் கடைசி மகனாகப் பிறந்தவர் சம்சூதீன். அவருக்கு ஒரு சகோதரி, 2 சகோதரர்கள் இருக்கின்றனர். இலங்கை மட்டக்களப்பில் ஆரம்ப கல்வி கற்ற நிலையில் 1998-ம் ஆண்டு யுத்தம் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் படித்த சம்சூதீன், 2011-ல் நியூசிலாந்தில் குடியேறினார்.

சம்சூதீனின் குடும்பம்

சம்சூதீனின் குடும்பம்

சம்சூதீனின் அப்பா முகமது இஸ்மாயில், மாளிகாவத்தை பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். தற்போது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். சம்சூதீனின் சகோதரர்கள் கட்டார் மற்றும் செளதி அரேபியாவில் வசிக்கின்றனர். காத்தான்குடி கபூர் கடை வீதியில் உள்ள வீட்டில் சம்சூதினின் தாயார் சரிதா வசித்து வருகிறார். அவரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தினர்.

நியூசிலாந்து சிறையில்...

நியூசிலாந்து சிறையில்...

2016-ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருடன் சம்சூதீன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் வீடியோக்களை வெளியிட்டதால் நியூசிலாந்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 2017-ம் ஆண்டு சிரியாவுக்கு தப்பி செல்ல முயன்ற போது ஆக்லாந்து விமான நிலையத்தில்; சம்சூதீன் கைது செய்யப்பட்டார். பின்னர் 2018-ம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஜாமீன் விதிகளை மீறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஓராண்டு கண்காணிப்புக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருடன் சம்சூதீன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் வீடியோக்களை வெளியிட்டதால் நியூசிலாந்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 2017-ம் ஆண்டு சிரியாவுக்கு தப்பி செல்ல முயன்ற போது ஆக்லாந்து விமான நிலையத்தில்; சம்சூதீன் கைது செய்யப்பட்டார். பின்னர் 2018-ம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஜாமீன் விதிகளை மீறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஓராண்டு கண்காணிப்புக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

போலீஸ் கண்காணிப்பு

போலீஸ் கண்காணிப்பு

அதனையடுத்து சம்சூதீனை பாலோ செய்வதற்காக 30 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். சம்சூதீனின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அதனால்தான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உடனேயே சம்சூதீனை போலீசார் சுட்டுக் கொல்ல முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+