Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயவுசெய்து கிளம்புங்க..! ராஜபக்ச & கோவுக்கு கடும் சிக்கல்! 10ல் 9 மக்கள் பதவி விலக வேண்டுமென கருத்து

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பத்தில் ஒன்பது பேர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் 96 சதவீத மக்கள் அரசியல் கட்சி தலைவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், பல தரப்பினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக அங்கு போராட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கும் நிலையில், இடைக்கால அரசை அமைக்கும் முயற்சியில் கோத்தபய இறங்கியுள்ளார்.

கோத்தபயவுக்கு சிக்கல்

கோத்தபயவுக்கு சிக்கல்

அதே நேரத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான என்ற அஸ்திரத்தை எதிர்கட்சிகள் எடுத்துள்ள நிலையில், அதனை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என சஜித் பிரேமதாச கூறினார். தற்போதுள்ள நிலைக்கு ராஜபக்ச குடும்பம்தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

ராஜபக்ச வெளியேற வேண்டும்

ராஜபக்ச வெளியேற வேண்டும்

இந்நிலையில் 96.2% இலங்கை மக்கள் அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்வதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று கண்டறிந்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் இந்த கருத்துக்கணிப்பின்படி, பத்தில் ஒன்பது இலங்கையர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ராஜபக்சே குடும்பம் இலங்கை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், 87% பேர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்யவும் கூறியுள்ளனர்.

மக்களிடம் கணக்கெடுப்பு

மக்களிடம் கணக்கெடுப்பு

ஏறக்குறைய 75% பேர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று நம்புகின்றனர், 225 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய நாடு முழுவதும் 55% மக்கள் விரும்புகின்றனர். 88% இலங்கையர்கள் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு, எரிபொருள், பால் பவுடர் மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்றனர் அல்லது குடும்ப அங்கத்தினர் வரிசையில் நிற்கின்றனர் என்றும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

வருமானம் இல்லை

வருமானம் இல்லை

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக 90% இலங்கை மக்கள் தங்கள் வருமானம் அல்லது அவர்களது குடும்ப வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர், 58% பேர் நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என நம்புகின்றனர். வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில் 2% பேர் மட்டுமே இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தற்போதைய உலகப் பொருளாதார நிலைமை காரணமாக இருக்கலாம் என்றும், , 90% பேர் அரசியல் காரணங்களே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+