ஏற்கனவே இருப்பது பத்தாதா? இலங்கை மக்களுக்கு இடியாய் விழுந்த அறிவிப்பு! மண்ணெண்ணெய் 1 லி. இவ்வளவா?
கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், இலங்கையில் மண்ணெண்ணையில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 87 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை இன்று முதல் ஒரு லிட்டர் 340 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி காரணமாக, ராஜபக்ச சகோதரர்கள் நாட்டி விட்டு தப்பி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே
இந்நிலையில், இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்று கொண்ட நிலையில் ஜூன் மாதம் 20ஆம் தேதி தேர்தலை சந்தித்தார். அதில் அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்பியாக மட்டுமே இருந்தாலும் பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபயாராய் இருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

விலைவாசி உயர்வு
ஆனாலும் இலங்கையில் மக்கள் அமைதி காக்க மறுத்து வருகின்றனர். இலங்கையில் நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வலுத்து வருவதைப் போலவே, விலைவாசி உயர்வும் விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால் சீனா, இந்தியா, பன்னாட்டு நிதியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கையேந்தும் நிலைக்கு இலைங்கை தள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு
விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விலை உயர்வும் கணிசமாக உள்ளது. இதனால் மக்களின் கோபம் அதிபர் ரணில் மீது திரும்பியுள்ளது. நிலைமை எப்போது சரியாகும் என்பதை கணிக்கக் கூட முடியாத நிலையில் தான் தற்போது இலங்கை அரசு உள்ளது.

மண்ணெண்ணெய் விலை
ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், இலங்கையில் மண்ணெண்ணையில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 87 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை இன்று முதல் ஒரு லிட்டர் 340 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications