பிரதமர் மோடிக்கு உயரிய விருது.. இலங்கை வழங்கிய ‛மித்ரா விபூஷனா’ பதக்கத்தின் சுவாரசிய பின்னணி
கொழும்பு: தாய்லாந்தில் இருந்து நேரடியாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு இலங்கையின் மிக உயரிய விருதான ‛மித்ரா விபூஷனா' என்ற பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதின் பின்னணி குறித்த விபரம் இப்போது வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு நேற்று பிரதமர் மோடி இலங்கை சென்றார்.

கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கிய போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் ராணுவம் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தான் இன்று பிரதமர் மோடிக்கு இலங்கையின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதின் பெயர் ‛மித்ரா விபூஷனா' என்பதாகும். ‛மித்ரா விபூஷனா' பதக்கத்தை பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கே வழங்கினார். இந்த விருது என்பது இலங்கை உடனான ஆழமான நட்புறவை வளர்க்கும் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதன்படி பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவையும், இலங்கையும் எடுத்து கொண்டால் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே நெருக்கமான உறவு உள்ளது. கலாசாரம், பாரம்பரியத்தில் இருநாட்டு மக்களுக்கும் தொடர்பு உள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் காலம் காலமாக இந்தியா - இலங்கையின் உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, ‛‛இது எனக்கு பெருமையான தருணம். எனக்கு மட்டுமின்றி இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த மரியாதையாக இதை பார்க்கிறேன். இது இந்தியா - இலங்கை ஆகிய இருநாடுகள் இடையேயான வரலாற்று தொடர்பு மற்றும் ஆழ்ந்த நட்புறவு உள்ளிட்டவற்றை காட்டுகிறது. இந்த விருதுக்காக இலங்கை அதிபருக்கும், இலங்கை மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்''என்றார்.
இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. கடந்த 2019ல் நடந்த குண்டு வெடிப்பு அதன்பிறகு பரவிய கொரோனா சமயத்தில் இலங்கைக்கு உதவி செய்தது. மேலும் சமீபத்தில் இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியபோதும் இந்தியா உதவி செய்தது. இதற்கிடையே தான் பிரதமர் மோடிக்கு இலங்கை சார்பில் உயரிய விருது என்பது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி வெளிநாடுகளின் உயரிய விருது வாங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல நாடுகள் பிரதமர் மோடிக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இலங்கை வழங்கிய இந்த விருதின் மூலம் பிரதமர் மோடி மொத்தம் 22 வெளிநாட்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications