அதிபர் மாளிகையை கைப்பற்றிய களிப்பு.. போராட்டக்காரர்களின் நள்ளிரவையும் தாண்டிய ஆட்டம், பாட்டம்
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த களிப்பில் நள்ளிரவு 1.30 மணிக்கு உற்சாகமாக கொண்டாடிய போராட்டக்காரர்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடியை கண்டித்து கடந்த 4 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்டவற்றால் கோபமடைந்த மக்கள் ஒரு கட்டத்தில் வன்முறையில் இறங்கினார்கள். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையை முற்றுகையிட்டு அவரை ஓடச் செய்தனர்.

ராஜபக்ச
மேலும் ராஜபக்சவின் வீடு, பாரம்பரிய வீடு ஆகியவற்றையும் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அவர் பதவியிலிருந்து ஓடினார். பின்னர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்தும் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் பலர் கண் எரிச்சலில் தவித்தனர். அவர்களுக்கு பொதுமக்களும் பாதுகாப்பு படையினரும் தண்ணீர் கொடுத்து உதவினர்.

போராட்டக்காரர்கள்
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கு மக்களும் பாதுகாப்பு படையினரும் உதவி செய்தனர். இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அதிபர் பயன்படுத்திய அத்தனை பொருட்களையும் பயன்படுத்தினர். அங்கிருந்த விதவிதமான உணவுகளை சுவைத்தனர்.

நீச்சல் குளம்
பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து மகிழ்ந்தனர். அதிபரின் சொகுசு காரையும் இயக்கி பார்த்தனர். மேலும் ரணிலின் அலரி மாளிகையையும் சூறையாடப்பட்டது. இதையடுத்து ரணில் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார். அது போல் கோத்தபயவும் வரும் 13 ஆம் தேதி பதவி விலகுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதிபர் படுக்கையில்
இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்த படுக்கையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
அப்போது அதிபரின் படுக்கையில் படுத்துக் கொண்ட ஒரு போராட்டக்காரர், அதிபரே நன்றி, நான் உங்கள் படுக்கையில் படுத்திருக்கிறேன், நன்றாக இருக்கிறது என கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் நள்ளிரவு 1.30 மணி ஆகியும் கொண்டாட்டத்தை கைவிடவில்லை. அங்கிருந்த மேஜைகளில் ஏறி நின்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதிபர் மாளிகையே களைகட்டியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications