தந்தை ராஜபக்சே சிலையை உடைத்து வீதியில் வீசிய சிங்களர்- கண்டதும் சுட்டுக் கொல்ல கோத்தபாய உத்தரவு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் பிரதமரும் தப்பி ஓடியவருமான மகிந்த ராஜபக்சே ஆகியோரது தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலையை சிங்களர்கள் இன்று தகர்த்து நடுவீதியில் வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுட்டுத் தள்ள முப்படையினருக்கு கோத்தபாய ராஜபக்சே அதிகாரம் வழங்கினார் என்கின்றன கொழும்பு தகவல்கள்.

இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலக கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் நெருக்கடியால் பிரதமர் பதவியை விட்டு தப்பி ஓடினார் மகிந்த ராஜபக்சே. கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்ற மகிந்த ராஜபக்சே அங்கிருந்து கடற்படை கப்பல் மூலம் நாட்டை விட்டு குடும்பத்துடன் ஓடிப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் நேற்று முதல் இதுவரையிலான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட வீடுகள், மாளிகைகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கையில் அவசர நிலை பிரகடனும் போலீஸ் ஊரடங்கும் அமலில் இருக்கிறது. இருந்த போதும் ராணுவமும் போலீஸும் பொதுமக்களின் உக்கிர கோபத்துக்கு முன்னால் அமைதி காத்து கிடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
Recommended Video

ஏற்கனவே ராஜபக்சே சகோதரர்களின் தந்தையின் நினைவு சின்னங்களை பொதுமக்கள் தகர்த்தனர்; அதேபோல் ராஜபக்சேக்களின் பூர்வீக வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இன்று பசில் ராஜபக்சேவின் வீடு கொளுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் முழு உருவ சிலை தகர்த்து எறியப்பட்டது. தங்காலையில் டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலை கம்பீரமாக நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை போராட்டக் குழுவினர் இன்று தகர்த்து நடு வீதியில் வீசி எறிந்தனர். ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பம் மீதான சிங்கள மக்களின் கோபம் கட்டுக்கடங்காமல் இருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்தே திடீரென பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களை கண்டதும் சுட்டுப் படுகொலை செய்ய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications