நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு.. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. ராஜபக்சே அதிரடி திட்டம்!
இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது.
[ராஜபக்சேவிற்கு உதவிய சீனாவின் ''எம்எஸ்எஸ்''.. ஆசியாவின் அண்ணனாகும் சீனா.. பின்னணி என்ன?]

கடும் சண்டை
இதனால் இலங்கையில் தற்போது கடும் சண்டை நிலவி வருகிறது. தான்தான் பிரதமர் என்று ராஜபக்சே பேசி வருகிறார். அப்ப நான் யார் என்று ரணில் விக்ரம சிங்கேவும் பேசி வருகிறார். இதனால் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

நாளை பதவி ஏற்பு
இந்த நிலையில் இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய விழாவாக இந்த பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இலங்கையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கும் அரசியல் அதிகாரம் ராஜபக்சேவிற்கு நாளை வழங்கப்பட இருக்கிறது.

விளக்கம் அளிக்க உள்ளார்
அதே சமயம் நாளை அதிபர் சிறிசேனா மக்கள் முன் உரையாற்ற உள்ளார். ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியது ஏன் என்று விளக்கம் அளிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆட்சி மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். ஆனால் என்ன அறிவிப்பு என்று விவரம் வெளியாகவில்லை.

என்ன பலம்
இலங்கையில் தற்போதையை கட்சிகளின் எம்பிக்கள் பலம் இதுதான், நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 6 இடங்களை கொண்டுள்ளது. ஈழ மக்கள் குடியரசு கட்சி 1 இடத்தை கொண்டுள்ளது, இதனால் யாருக்கும் அங்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் இந்த பதவி ஏற்பு சரியானது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications