சிறிசேனாவைக் கொல்ல முயற்சி.. முக்கிய ஆதாரங்களைத் திரட்டுகிறது இலங்கை
Recommended Video

கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய முயற்சித்தது யார் என்பது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சீனாவின் உதவியை அந்த நாடு நாடியுள்ளதாம்.
சீனத் தொலைபேசி நிறுவனமான ஹூவேய் நிறுவனத்தின் தகவல்களை ஆராய்ந்து அதைக் கண்டுபிடிக்க இலங்கை கோர்ட்டின் உத்தரவை அரசு பெற்றுள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரியுடன் இந்த சதித் திட்டம் குறித்து தான் பேசியதாக போலீஸ் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இவர்தான் சிறிசேனாவைக் கொல்ல சதி நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்தியாவின் ரா உளவு நிறுவனம்தான் கொலைச் சதியில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை அதிபர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன என்பது நினைவிருக்கலாம்.
நமலிடம் இதுகுறித்து இலங்கை காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இலங்கை அதிபர் மட்டுமல்லாமல், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவையும் கொல்ல சதி நடந்ததாக கூறியிருந்தார் நமல்.
இதற்கிடையே நமல் பயன்படுத்திய தொலைபேசியின் பேச்சு விவரங்களை ஆராய முடிவு செய்துள்ளது இலங்கை சிஐடி போலீஸ். இதுதொடர்பாக ஹூவேய் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற கோர்ட் அனுமதியை அது பெற்றுள்ளது. நமல் தனது போனில் அனைத்து விவரங்களையும் அழித்து விட்டதால் ஹூவேய் நிறுவனத்திடமிருந்து அவற்றைப் பெற போலீஸ் முடிவு செய்துள்ளது.
முன்னதாக கொலைச் சதித் திட்டத்தில் தொடர்புடையதாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனக்கு இலங்கை சிஐடி போலீஸால் உயிருக்கு ஆபத்து ஏர்பட்டிருப்பதாகவும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால் கோர்ட் அதை ஏற்க மறுத்து விட்டது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications