ஆட்சியிலிருந்து விரட்டப்படும் கோத்தபய ராஜபக்ச.. நாட்டின் அடுத்த இடைக்கால பிரதமர் யார்?
கொழும்பு: இலங்கை பிரதமராகவோ இல்லை சபாநாயகராகவோ சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தனே பொறுப்பேற்கிறார். இவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்கவே நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின. மேலும் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
இதனால் ராஜபக்ச குடும்பத்தினர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதற்காக வீதிகளில் இறங்கி போராட்டத்தையும் முன் வைத்தனர்.

பிரதமர்
இதன் பலனாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகி, அலரி மாளிகையை விட்டே ஓடிவிட்டார். பின்னர் பிரதமராக ரணில் விக்கிரமதுங்க பொறுப்பேற்றார். அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சில முன்னெடுப்புகளை எடுத்தார். ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை.

பசி பட்டினி
இதையடுத்து பசி, பட்டினியால் வாடும் போராட்டக்காரர்கள் நேராக அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கு அவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விரட்டினர். எனினும் பாதுகாப்பு படையினரால் பெருமளவில் கூடிய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

போராட்டக்காரர்கள்
ஒரு கட்டத்தில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் போராட்டக்காரர்களுக்கு உதவினர். பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் போராட்டக்காரர்களுடன் இணைந்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோத்தபய
இதையடுத்து கோத்தபயவும் ரணிலும் பதவி விலக கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து ரணில் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி பதவி விலகுவதாக அறிவித்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு கோத்தபயாவும் வரும் 13 ஆம் தேதி பதவி விலகுவதாக சபாநாயகர் மூலம் அறிவித்துள்ளார்.

பிரதமரா இல்லை அதிபரா
இதையடுத்து அந்த நாட்டின் இடைக்கால அதிபராக சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தனே பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் இடைக்கால பிரதமராகவும் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போதைய சூழலில் மீண்டும் தேர்தலை நடத்தும் அளவுக்கு பண வசதி இல்லை. எனவே அபய்வர்த்தனே பிரதமராகிறாரா இல்லை அதிபராகிறாரா என்பது தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications