இலங்கை: ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக 1,000 தொழிற்சங்கங்கள் இன்று ஸ்டிரைக்- 3 வது வாரமாக கிளர்ச்சி!
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் 1,000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த இலங்கையும் இன்று முடங்கி உள்ளது.
இலங்கையில் பொருளாதார பேரழிவுக்கு பொறுப்பேற்று ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டும்; ராஜபக்சேக்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதை வலியுறுத்தி 3-வது வாரமாக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பு காலிமுகத்திடலில் 2 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் இரவும் பகலுமாக நடைபெறுகின்றன. இன்னொரு பக்கம் கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களின் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கை அரசியலிலும் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒரு வார காலத்தில் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கெடு விதித்துள்ளன. ஆனால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டாலும் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவது இல்லை என அடம்பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் 1,000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ராஜபக்சேக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருந்து விலகாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications