ஒரு இலங்கை அதிபர் என்றும் பாராமல்! "ஹாலோ சார்.. சின்ன பின் சார்ஜர் இருக்கா?" இளைஞரின் மெசேஞ் வைரல்
கொழும்பு: இலங்கையில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், இணையத்தில் ஃபோட்டோ ஒன்று வைரலாகி உள்ளது.
Recommended Video
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நீட்டித்து வந்த அரசியல் குழப்பம் இப்போது கையை மீறிச் சென்றுள்ளது. மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஏற்கனவே மருந்து, உணவுப் பொருட்கள் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர்.

மின்வெட்டு
கடந்த ஆண்டு முதலே அங்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு நிலைமை மோசமடையாமல் அரசு பார்த்துக் கொண்டது. இருப்பினும், இந்த ஆண்டு நிலைமை மெல்லக் கையை மீறிச் செல்ல தொடங்கியது. எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்குக் கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இலங்கையில் பல பகுதிகளில் மணிக் கணக்கில் கூட மின்வெட்டு நிலவியது.

ராஜினாமா
இது அத்தனைக்கும் காரணம் ஆளும் ராஜபக்ச தரப்பு தான் காரணம் என்று இலங்கை மக்கள் போராட வீதிக்கு வந்தனர். சிறு அளவில் தொடங்கிய மக்கள் போராட்டம் வீரியம் மிக்கதாக மாறியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் போராட்டம் கையை மீறிச் சென்ற நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி வேறு வழியின்றி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அப்போதே அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

போராட்டம்
இருப்பினும், பதவிக் காலம் முடியும் வரை ராஜினாமா செய்யப்போவது இல்லை என்று கோத்தபய ராஜபக்ச மறுத்துவிட்டார். மேலும், ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் எடுத்த நடவடிக்கைகளும் பலன் அளிக்காத நிலையில், பொறுமையிழந்த மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். மேலும், அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

அதிபர் மாளிகை
இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து ரகசியமாக வெளியேறினார். மேலும், அவர் கப்பல் மூலம் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் அதை கிட்டதட்ட ரிசார்ட் போலவே மாற்றிவிட்டனர். குழந்தைகள் உடன் சென்று அங்கு உணவு சாப்பிடுவது, அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

சண்டை வீடியோ
நாட்டில் மக்கள் பல மணி நேரம் மின்வெட்டால் எதிர்கொண்டு வரும் நிலையில், அதிபர் மாளிகையில் தாங்கள் புகுந்த போது பல ஏசிக்கள் யாருமே இல்லாத சூழலிலும் ஓடிக் கொண்டு இருந்ததாக போராட்டக்காரர்கள் சாடிவருகின்றனர். அதிபர் மாளிகையில் இருக்கும் படுக்கையில் அவர்கள் சண்டையிட்டு விளையாடுவது போன்ற படங்களும் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது.

சின்ன பின் சார்ஜர்
இதற்கிடையே அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட இளைஞர் ஒருவர், அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மேசேஜ் அனுப்பிய ஸ்கீரீன்ஷாட் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் அந்த இளைஞர் "சார், வீட்டுல சின்ன பின் சார்ஜர் இல்லையா" என்று கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோமெட்டிக்காக பதில் ஒன்றும் வந்துள்ளது. அதாவது, "எங்களைத் தொடர்பு கொண்டமைக்கு நன்றி! உங்கள் முழு பெயர், தொலைப்பேசி இலக்கம் மற்றும் முகவரியை அனுப்பவும்" என்று அதிபரிடம் இருந்து ஆட்டோமெட்டிக் ரிப்ளே வந்துள்ளது.

ஸ்கிரீன் ஷாட்
இந்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்களின் நக்கலுக்கு எல்லையை இல்லாமல் போய்விட்டதாகவும் பலரும் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ள இளைஞர்கள் அங்குள்ள ஜிம், டிவி போன்ற பல வசதிகளைப் பயன்படுத்தும் வீடியோ, ஃபோட்டோ வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications