கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை பொருளாதார நெருக்கடி: நாளை மக்கள் போராட்ட அறிவிப்பு.. முழு ஊரடங்கை அறிவித்தது அரசு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் மக்கள் நாளை பெரிய அளவிலான போராட்டம் நடத்த அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊடரங்கை அறிவித்தது இலங்கை அரசு.

Recommended Video

    Reason for Sri Lanka Economic Crisis Explained | OneIndia Tamil

    இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் சொல்லொண்ண முடியாத துயரத்திற்குள்ளாகியுள்ளார்கள்.

    பெரும் வருவாயை கொடுக்கும் சுற்றுலாத் துறை முடக்கப்பட்டதால் அன்னிய செலாவணி இருப்பும் குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. பால், காய்கறிகள், ரொட்டி உள்ளிட்டவற்றின் விலை 3 அல்லது 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.

    இலங்கை பொருளாதார நெருக்கடி.. விழுந்தது முதல் விக்கெட்! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரோஷன் ரணசிங்கேஇலங்கை பொருளாதார நெருக்கடி.. விழுந்தது முதல் விக்கெட்! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரோஷன் ரணசிங்கே

    இலங்கை அதிபர்

    இலங்கை அதிபர்

    இதை கண்டித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு வெளியே வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர் பதவி விலக கோரி நடந்த போராட்டத்தால் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

    போராட்டம் வன்முறை

    போராட்டம் வன்முறை

    இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறையால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமலாகியுள்ளது. எனினும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து
    இலங்கையில் அமைதியின்மை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    பெரிய போராட்டம்

    பெரிய போராட்டம்

    இந்த நிலையில் நாளை பெரிய போராட்டம் நடத்த மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டத்தால் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போது பெரிய போராட்டத்தால் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.

    இன்று மாலை முதல் ஊரடங்கு

    இன்று மாலை முதல் ஊரடங்கு

    இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Srilanka Crisis: Srilanka government announces curfew as people calls for big protest against the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X