இலங்கை அதிபர் தேர்தல் ரிசலட்.. இரத்தினபுரி மாவட்ட தபால் வாக்கில் அநுர குமார திஸாநாயக்க முன்னிலை
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலின் பதிவான இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகள் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகள் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 4,675 வாக்குகள் கிடைத்துள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு 500 வாக்குகள் கிடைத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சி இழந்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த காரணத்தால், அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வானார். விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறும் நிலையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது.
இலங்கை அதிபர் தேர்தல் முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம் ஆனது. இதையொட்டி இலங்கையில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது .
மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது நாளை பிற்பகல் தெரியும்.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலின் பதிவான இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகள் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகள் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 4,675 வாக்குகள் கிடைத்துள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு 500 வாக்குகள் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications