ரணில் விக்ரமசிங்க அதிரடி கைது.. மனைவியின் பட்டமளிப்பு விழாவால் வந்த சோதனை.. முழு பின்னணி
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதிபராக இருந்த காலத்தில் மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்கு லண்டனுக்கு தனிப்பட்ட முறையில் ரணில் விக்ரமசிங்க பயணித்தபோது அரசு நிதியை செலவழித்துள்ளார். இதுதொடர்பான புகாரில் அவர் இன்று சிஐடி போலீசில் விசாரணைக்கு ஆஜரானபோது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இலங்கை சமீபத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. மக்கள் கொந்தளித்தனர். உள்நாட்டில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க 2022 ஜூலை 14ம் தேதி முதல் 2024 செப்டம்பர் 23ம் தேதி வரை செயல்பட்டார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். தேர்தலில் வென்ற அநுர குமார திசாநாயக்க அதிபராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பணத்தை தவறான முறையில் மனைவிக்காக பயன்படுத்திய புகாரில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதாவது ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்த
சமயத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனுக்கு பயணம் செய்தார்.
கூபா நாட்டின் ஹனாவா நாட்டில் நடந்த ஜி 77 உச்சி மாநாட்டை முடித்து கொண்டு அங்கிருந்து நேரடியாக ரணில் லண்டனுக்கு பயணம் செய்தார். இது அவரது தனிப்பட்ட பயணமாகும். லண்டன் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் ரணில் விக்ரமசிங்க மனைவி மைத்ரிக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். இந்த லண்டன் விசிட் ரணில் விக்ரமசிங்கவின் அரசு முறைப்பயணம் கிடையாது. தனிப்பட்ட பயணமாக இருந்தாலும் கூட அவர் அரசு நிதியை பயன்படுத்தியதாக புகார் கிளம்பியது.
இந்த குற்றச்சாட்டை ரணில் விக்ரமசிங்க முற்றிலுமாக மறுத்தார். சொந்த நிதியை தான் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இதுபற்றி இலங்கையின் பொருளாதார சிஐடி பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ரணில் விக்ரமசிங்க அரசு நிதியை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக இன்று சிஐடி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க ஆஜரான நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications