கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பி ஓட்டம்! இன்று அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா! இலங்கையில் பரபர
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இன்று அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளார். ஏற்கனவே ராஜினாமா கடிதத்தில் அவர் கையெழுத்திட்ட நிலையில் இன்று பதவி விலகுகிறார்.
Recommended Video
ராஜினாமாவிற்கு முன்னதாக கோத்தபாய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவிற்கு பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கிருந்து கோத்தபாய ராஜபக்சே வேறு ஒரு ஆசிய நாட்டிற்கு பறக்க உள்ளதாக தகவல்.

தப்பி ஓட்டம்
சர்வதேச ஊடகமான ராய்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற கோரிக்கை வைத்தார். பதவி விலக வேண்டும் என்றால் வெளியேறும் வரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். பின்னர் விமானப்படை விமானத்தில் அவர் மாலத்தீவிற்கு பறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

பதவி விலகல்
தற்போது மாலத்தீவில் உள்ள மாலே பகுதியில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அதிபர் என்பதால் எங்களால் தடுக்க முடியவில்லை. அதிபர், அவரின் மனைவி, இரண்டு பாதுகாவலர்கள் ஆகியோருடன் கோத்தபாய ராஜபக்சே விமானத்தில் சென்றதால் அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோத்தபாய ராஜபக்சே இன்று அதிபரப்பூர்வமாக பதவி விலகுகிறார்.

ஜூலை 20
இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் ஜூலை 20ம் தேதி கூட உள்ளது. அங்கு இப்போது பிரதமரும் இல்லை, அதிபரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 20ம் தேதி அங்கு புதிய அதிபர் எம்பிக்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவசர நிலை கருதி மக்கள் மூலம் அல்லாமல், பாராளுமன்ற எம்பிக்கள் மூலம் அங்கு புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சஜித் பிரேமதாச அந்நாட்டு இடைக்கால அதிபர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். இதற்கு முன் மூன்று முறை இவர் அமைச்சராக இருந்துள்ளார். இவரின் தந்தை ரணசிங்க பிரேமதாச அந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அங்கு மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இடையில் சில நாட்கள் போராட்டம் நடக்காத நிலையில், அங்கு மீண்டும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதிபர்
முக்கியமாக கொழும்பில் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்த கோட்ட காம கோ பகுதியை மீண்டும் போராட்டக்காரர்கள் நேற்று முதல்நாள் கைப்பற்றினார்கள். அதோடு நேற்று இலங்கையில் அதிபர் அலுவலகம் மற்றும் வீட்டை போராட்டகாரர்கள் கைப்பற்றினார்கள். பல்லாயிரம் பேர் இலங்கை அதிபர் வீட்டை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தனர். அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இருந்த மெத்தையில் தூங்குவது, ஸ்விம்மிங் பூலில் ஆட்டம் போடுவது, அவர் வீட்டு பாத் ரூமில் குளிப்பது நேற்று போராட்டக்காரர்கள் கெட்ட ஆட்டம் போட்டனர். அங்கு தொடர்ந்து அதிபர் மாளிகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications