கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8 இடங்கள்... 9 மனிதவெடிகுண்டுகள்... புகைப்படங்களுடன் பட்டியலை வெளியிட்டது இலங்கை!

Google Oneindia Tamil News

கொழும்பு: ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பேரின் விவரங்களை படங்களுடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் குவிந்திருந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து மனித வெடிகுண்டுகள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தின. இதில் 359 பேர் பலியாகினர்.

sri lanka police name all nine easter sunday suicide bombers

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த அமைப்புடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நபர்களின் விவரங்களை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த சதி.. அமெரிக்காவின் வார்னிங்கையாவது காதில் போட்டுக் கொள்ளுமா?இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த சதி.. அமெரிக்காவின் வார்னிங்கையாவது காதில் போட்டுக் கொள்ளுமா?

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் மனிதவெடிகுண்டு நபரின் பெயர்

1) கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம்- அலாவுதீன் அஹமட் முவாத்

2) கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயம் அச்சி மொஹமது மொஹமட் ஹஸ்துன்

3) கிங்ஸ்பரி ஹோட்டல் மொஹமட் அஸாம் மொஹமட்

4) ஷங்கிரில்லா ஹோட்டல் மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான்

மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம்

5) மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மொஹமட் நஸார் மொஹமட் அசாத்

6) சினமன் ஹோட்டல் மொஹமட் அப்ராஹிம் இன்சாப்

7) தெஹிவளை ட்ரொபிகல் இன் விடுதி அப்துல் லதீப் ஜமீல்

8) தெமட்டகொட மஹாவில பூங்கா பாத்திமா இல்ஹாம்

English summary
Sri Lanka’s police have named nine people they say staged the Easter Sunday suicide bombings that killed 356 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X